மருத்துவ படிப்பு
மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

 தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

 -இதுகுறித்து தமிழக மருத்துவ கல்வி இயக்ககம் தன் அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

 தமிழக அரசு  மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,425 இடங்களை பூர்த்தி செய்வதற்காக, நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களிடம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு செப்டம்பர் 22-ம் தேதி முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசுக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். அதன்பிற்கு அந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப் படும்

 -இவ்வாறு தமிழக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com