மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்..!

மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்..!

மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்றோடு நிறைவடையவுள்ள நிலையில், இன்னும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. 

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக மின் வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து  மின் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.  ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து ஆதார் எண்ணை இணைக்க தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போதுவரை  குடிசை, கைத்தறி, விசைத்தறி , விவசாய இணைப்பு என 2 கோடியே 34 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் உடன் இணைக்கப்பட்டதாக தமிழ்நாடு மின் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டது. இது மொத்தம் உள்ள 2 கோடியே 67 லட்சம் இணைப்புகளில் 87.44 சதவீதம் ஆகும். தற்போதுவரை இன்னும் 33 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். ஏற்கனவே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க முதலில் டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர், கூடுதலாக ஒரு மாதம் வழங்கப்பட்ட நிலையில், அந்த அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதன்படி https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 15 நாட்கள் மட்டும் கூடுதலாக கால அவகாசம்  வழங்கலாம் எனத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com