மொபைல் போன் திருட சிறுவர்களுக்குப் பயிற்சி!

மொபைல் போன் திருட சிறுவர்களுக்குப் பயிற்சி!

ள்ளி சிறுவர்களுக்கு மொபைல் போன்களைத் திருட பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்திலுள்ள ராஜ்மஹால், தின்பஹார் ஆகிய நகரங்களில் அங்குள்ள சில பள்ளிகளில் இதற்கென பயிற்சி அளிக்கப் படுகிறதாம்.

இவர்கள் பயிற்சிக்குப் பிறகு பெரிய நகரங்களுக்கு, அனுப்பி வைக்கப்படுகின்றனர். பின்னர், அதன் தலைவர்கள் அவர்களுக்கு ஏற்ற பகுதிகளை ஒதுக்கி அவர்களின் வேலையை கண்காணிக்கின்றனர் என்றும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. மொபைல் போன் திருடும் கும்பலைச் சேர்ந்த நான்கு சிறுவர்களை ராஞ்சி போலீசார் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.

அச்சிறுவர்களிடம் இருந்து திருடப்பட்ட 43 செல்போன் களையும் போலீசார் மீட்டுள்ளனர். ஏற்கெனவே 2020ம் ஆண்டிலும் மொபைல் திருடியதற்காக பிடிபட்டு, பின்னர் பீகாரில் உள்ள பக்சர் மாவட்டத்தில்இருக்கும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் நான்கு மாதங்கள் வரை அங்கு இருந்ததாகவும் பிடிபட்ட 17 வயது நபர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும்,  11 வயதே ஆன இன்னொரு சிறுவனும் கடந்த காலங்களில் மொபைல் திருட்டு வழக்கில் ஈடுபட்டு, பின்னர் பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் 11 நாட்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. திருட்டு போன்ற குற்றங்களுக்காக சிறார் இல்லங்களில் குறுகிய காலத்திற்கு இவர்கள் அடைக்கப்படுகின்றனர். அதனால் போலீஸாரும் அவர்களைப் பற்றி பெரிதாக அதிகம் விசாரிப்பதில்லை.

இந்த திருட்டில் பிடிபட்ட சிறுவர்கள் போலீஸாரிடம் கூறுகையில், தினமும் 8 முதல் 10 செல்போன்களை திருடனும்னு இலக்கு எங்களுக்கு. திருடப்படும் ஒவ்வொரு மொபைலுக்கும் ஏற்ப ஊதியம் கொடுக்கப்படுகிறது. மொபைல் போனின் பிராண்ட் மற்றும் விலையைப் பொறுத்து, ஒரு கைப்பேசிக்கு 1000 முதல் 2000 ரூபாய் வரை கொடுப்பார்கள். இதில் முக்கியமானது மொபைல் திருட்டில் ஈடுபடும் சிறுவர்கள் அவர்களது பெற்றோரின் சம்மதத்துடனே அந்த வேலையைச் செய்கின்றனர் என்பதுதான்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com