தந்தைக்கு உதவியாக பனையேறும் பள்ளி மாணவி!

தந்தைக்கு உதவியாக பனையேறும் பள்ளி மாணவி!

-காயத்ரி

விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லக்கூடிய சாலையை ஒட்டி உள்ள நரசிங்கனூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனை மரம் வளர்த்து பனைத்தொழில் செய்து வருகின்றனர்.  குறிப்பாக பனை ஓலை பின்னுதல் கருப்பட்டி தயாரிப்பு, பதநீர் விற்பனை, நுங்கு விற்பனை போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பனையேறும் தொழிலில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் பிள்ளைகளும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பாண்டியன் என்பவர் மகள் கரிஷ்மா, அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் விடுமுறை நாட்களில் தந்தைக்கு உதவியாக  தானும் பனையேறி அசத்தி வருகின்றார். குறிப்பாக எந்த பனை மரமாக இருந்தாலும் எவ்வளவு உயரமாக இருந்தாலும் ஏறி இந்த மாணவி அசத்தி வருகின்றார்.

இதுகுறித்து கரிஷ்மாவிடம் பேசினோம்..

''நான் 7 -வது படிக்கும் போதே பனை மரம் ஏற கற்றுக் கொண்டேன். ஆரம்பகட்டத்தில் பயம் இருந்தது. ஆனால் இப்போது அந்த பயம் போய்விட்டது. எவ்வளவு உயரமான மரமாக இருந்தாலும் அசால்ட்டாக ஏறி பனம்பால் சீவி வருகிறேன் அச்சம் இல்லை. பள்ளிக்கு செல்வதற்கு முன் காலை நேரத்திலும், பள்ளி முடித்து வந்து மாலை நேரத்திலும் தந்தைக்கு உதவியாக பனை ஏறுகிறேன்.'' என்றார்.

இது குறித்து அவருடைய தந்தையார் பனையேறி பாண்டியன் கூறினார்..

''வாழையடி வாழையாக நாங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம் ஆனால் 80 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசுகள் இறக்குவதற்கு தடைவிதித்துள்ளது.

இந்த தடையை நீக்கினால், எங்கள் வாழ்க்கை மேம்படும். குறிப்பாக கள்ளை உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும்''

-இவ்வாறு பாண்டியன் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com