சென்னை மழைக்கு இருவர் பலி!

சென்னை மழைக்கு இருவர் பலி!

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது.

சென்னையில் பெய்த மழைக்கு இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புளியந்தோப்பில் உள்ள பிரகாஷ் காலனியில் வசிக்கும் சாந்தி(47) என்பவர் பால்கனி சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவத்தில் வியாசார்பாடியில் வசிக்கும் தேவேந்திரன்(52) என்கிற ஆட்டோ ஓட்டுனர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். அவர் தனது வீட்டுக்கு தெருவில் தேங்கி இருந்த மழைநீரில் நடந்து சென்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மழை குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்த கருத்தாவது…

தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் நவம்பர் 3ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூரில் உள்ள ரெட்ஹில்ஸில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com