உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி; 3-வது நாளாக ஊழியர்கள் ஸ்ட்ரைக்!

ஊழியர்கள் போராட்டம்
ஊழியர்கள் போராட்டம்

 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில், இன்று 3-வது நாளாக ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் கட்டணமின்றி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது பாஸ்டேக் முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் பாஸ்டேக் நடைமுறைக்கு வந்ததால், அங்கு பணியாற்றிய 28 ஊழியர்களை இம்மாதம் 1-ம் தேதி பணி நீக்கம் செய்தது சுங்கச் சாவடி நிர்வாகம்.

இதனைக் கண்டித்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 -இதுகுறித்து சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பாக தெரிவித்ததாவது;

 ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருகிறது. ஆனால், இந்த ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மைய பகுதியில் அமைந்துள்ள உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக கடந்து செல்கின்றன.

விடுமுறை நாட்கள் மற்றும் ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகமாக வாகனங்கள் செல்லும் இந்த சூழலில், சுங்கச்சாவடி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பல லட்சம் ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com