கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது!

கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திளும் ஒரு கிராம ஊராட்சி வீதம் 37 ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு அறிவித்த செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் 37 ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 3.8 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த விருதுக்கு https://tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்திற்குள் நுழைவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் பயனர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு போட்டியிடும் கிராம ஊராட்சிகளை பட்டியலிட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்து கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டும். இறுதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் தேர்வு செய்யும் கிராம ஊராட்சிகளுக்கு "உத்தமர் காந்தி விருது" வழங்கப்படும். அதன்படி 37 கிராம ஊராட்சிகளுக்கு முதல்வர் இந்த விருதுக்கான கேடயம், பாராட்டு சான்றிதழ் மற்றும் 10 லட்சம் ஊக்க தொகையை வழங்குவார். ஜனவரி 17-ம் தேதிக்குள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com