காதலர் தின கொண்டாட்டம்.... பூக்களின் விலை திண்டாட்டம்!

காதலர் தின கொண்டாட்டம்.... பூக்களின் விலை திண்டாட்டம்!

காதலர் தினம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரோஜாக்கள் தானே. ரோஜா பூக்கள் இல்லாத காதலர் தினமா? காதலர் தினத்திற்கு பலரும் ரோஜாக்களை பரிசளிப்பதால் ரோஜா பூக்களுக்கு வருடம் தோறும் கிராக்கி ஏற்படுவது வாடிக்கை தான். அதன் காரணமாக ரோஜா பூக்களின் விலை ராக்கெட் வேகத்தில் சர சரவென உயர்வதில் ஆச்சர்யமுமில்லை. அதே நேரத்தில் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தைக்கு ஓசூர் ஊட்டி பெங்களூர் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து விதவிதமான ரோஜா பூக்கள், மற்றும் பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன

காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை சந்தையில் ரோஜா பூக்களுக்கு அதிக கிராக்கி இருப்பதால் அவற்றின் விலை கிட்டத்தட்ட மூன்று மடங்கு உயர்ந்தது.

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூக்களின் விலை மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. 120 ரூபாய் முதல் 130 ரூபாய் விற்பனையான ரோஜா கட்டு ஒன்று இன்று 400 ரூபாய்க்கு விற்பனையானது.

காதலர் தினம் கொண்டாட்டத்தால் தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது. 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா 120 ரூபாய் முதல் 130 ரூபாய் வரை விற்பனையானது. இன்று ஒரு கட்டு ரோஜாப்பூ 400 ரூபாய்க்கு விற்பனையானது. ரோஜா பூக்களை கேரளா மற்றும் பல்வேறு ஊரிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். அதே நேரம் ஒரு கிலோ பிச்சிப்பூ 1000 ரூபாய்க்கும், மல்லிகை பூ 700 ரூபாய்க்கும் விற்பனையானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com