மாணவ - மாணவியர்
மாணவ - மாணவியர்

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள்!

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஐந்து வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தைகளையும், அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில், தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை, பொது மக்கள் அறியும் வகையில், வண்ண, 'பேனர்'கள் வைப்பதுடன், துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பிரிவுகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதை எடுத்துரைத்து, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். மாணவர் சேர்க்கையை, கோடை விடுமுறை இறுதியில், பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நடத்த வேண்டும்.

பள்ளி
பள்ளி

ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளில், ஐந்து வயதானோரை கண்டறிந்து அவர்களையும், பள்ளிகளைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளையும் கண்டறிந்து சேர்க்க வேண்டும். ஊக்கப் பரிசு வழங்குவதன் வழியே, மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கலாம்.

பொன்னமராவதியில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஐந்து வயதுக்கு மேலுள்ள குழந்தைகளை பெற்றோர்கள் அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அரசு அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் அல்போன்சா தலையில் சக ஆசிரியர்கள், பயிலும் மாணவ, மாணவிகள் பொன்னமரவாதி பகுதி தெருக்களில் அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்றனர்.

ஆடல், பாடல் வழியாக அரசு பள்ளியில் ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள் எனவும் நல்ல பண்பை வளர்த்திட அரசு பள்ளியில் இன்றே சேர்த்திடுக என்று முழக்கம் இட்டு மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் சென்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com