நரி முகத்தில் விழிக்கும் வாழப்பாடி வினோதத் திருவிழா!

நரி முகத்தில் விழிக்கும் வாழப்பாடி வினோதத் திருவிழா!

வ்வொரு பகுதி மக்களுக்கும் பழக்க வழக்கங்களும்  கலாசாரமும் மாறுபட்டு இருக்கும். அவற்றில் அங்கு நடைபெறும் திருவிழாக்களும் அடங்கும் . தெய்வங்கள், சித்தர்கள், விலங்குகள், உருவற்றவை என பலதரப்பட்ட வழிபாடுகளில் சில வினோதமான வழிபாடுகளும் அடங்கும். ஆங்காங்கே இவை நடைபெற்று வருவதையும் நாம் அறிவோம். அவற்றில் சில நம் கவனத்தைக் கவரும். அப்படி நம்மைக் கவர்ந்த வினோத வழிபாடுதான் வாழப்பாடி அருகே சமீபத்தில் நடந்த நரி முகத்தில் விழிக்கும்  நரியாட்டம் எனும் வினோத வழிபாடு.

       பொதுவாகவே நரி என்பது குறிப்பிட்ட சமூகத்தினர் சார்ந்த விலங்காக நம்மால் பார்க்கப்படுகிறது. ஆனால் சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த கிராம மக்கள் அந்த நரியை தெய்வமாகவே வழிபட்டு வருவது ஆச்சரியம் தருகிறது.

       (18-01-2023) கொட்டவாடி கிராம மக்கள் நரியைப் பிடித்து அதன் முகத்தில் விழிக்கும் வினோத திருவிழாவைக் கொண்டாடினர். முதலில் கிராம மக்கள் நரி பிடிக்கும் வலையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று தங்கள் விவசாய நிலங்களில் வலைகளை விரித்து வைத்தனர். காத்திருந்து வலையில் சிக்கிய வங்கா நரியை கூண்டில் அடைத்து ஊர்வலமாக மேளம் முழங்க தூக்கிச் சென்றனர்.

          ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட நரிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்று அதன் முகத்தில் விழித்து மகிழ்ந்தனர். அப்பகுதியில் வசிக்கும் பெண்களும் மற்றவர்களும் மற்ற எந்த ஊரிலும் இல்லாத வகையில் கோலாகலமாகக் கொண்டாடிய இந்த வினோதத்திருவிழா எதற்காக ஏன் நடத்தபடுகிறது?

         பொதுவாகவே நரி முகத்தில் விழித்தால் நாம் நினைக்கும் காரியம் வெற்றிகரமாக நிகழும் என்பது தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கும் நம்பிக்கை. அதன் வழியே தை மாதத்தில் புதிய பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பு நரி முகத்தில் விழித்தால் நல்ல பலன் கிடைக்கும் என்றும்,  நல்ல மழை பெய்து விவசாயம் மற்றும் அதனை சார்ந்த அனைத்து தொழில்களும் செழிக்கும் என்றும் இந்த கிராம மக்களின் நீண்டகால நம்பிக்கை. அதன் வெளிப்பாடேஇந்தத் திருவிழாவின் அடிப்படையும் கூட.

பிடித்து வரும் நரியின் முகத்தில் விழித்து பொங்கல் வைத்துப் பின் அதற்கு வழிபாடுகள் நடத்தி திரும்ப அதன் இடத்திற்கேச் சென்று கூண்டிலிருந்து அதனை விடுவிக்கின்றனர்.

ஆனால் வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின்படி, நரியைப் பிடிப்பது விலங்குகளைப் பிடிப்பது சட்டப்படி தவறு என்பதால் இது குறித்து வனச்சரகரின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com