வீரப்பனின் முக்கிய கூட்டாளி மாதையன் மரணம்!

வீரப்பனின் முக்கிய கூட்டாளி மாதையன் மரணம்!

மிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் மிகப்பெரிய சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன். வீரப்பனின் கூட்டாளிகளில் முக்கியமானவரான இருந்தவர் மீசை மாதையன். இவர் 1993ம் ஆண்டு வீரப்பன் குழுவிலிருந்து தப்பித்து வந்து கர்நாடக போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில் அவருக்கு அம்மாநில நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அதன் பின்னர் அம்மாநில உச்ச நீதிமன்றம், மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய நான்கு பேரின் ஆயுள் தண்டனையைத் தூக்குத் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து அவர்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். ஆனால், அந்த மனுவை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சரண் அடைந்த வீரப்பனின் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டங்களை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, அவர்களின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.

கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் சைமன் என்பவரும், 2022ம் ஆண்டு பிலவேந்திரன் என்பவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். அதையடுத்து கடந்த பிப்ரவரியில் ஞானபிரகாசம் பரோலில் வெளியில் வந்தார். கடந்த 31 ஆண்டுகளாக மைசூர் சிறையிலிருந்த, மீசை மாதையன் கடந்த 11ம் தேதி அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு, நினைவிழந்த நிலைக்குச் சென்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீசை மாதையன் நினைவு திரும்பாமலே நேற்று மாலை உயிரிழந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com