வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்கணுமா? உடனே போங்க!

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இன்று முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இன்று முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒரு மாத காலக்கட்டத்தில் வாக்காளர்கள் புதிதாக தங்கள் பெயர் சேர்ப்பு, முகவரியில் திருத்தம், ஆகியவற்றுக்கான மனுக்களை அளிக்கலாம்.

மேலும் பணிக்கு செல்வோர்கள் வசதிக்காக இந்த மாதத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர்கள் தாங்கள் வாக்களிக்கும் பொழுது எந்தெந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கை பதிவு செய்தார்களோ அங்கு சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

அந்த இரண்டு நாட்களுக்கு மட்டுமே சிறப்பு முகாம்கள் வழங்கப்படும் மற்ற நாட்களில் அரசு அலுவலகங்களில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலர்களை சந்தித்து விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com