எச்சரிக்கை: கோவிட் தொற்று - அபாயம் இன்னும் நீங்கிவிடவில்லை; தடுப்பூசியும் முகக்கவசமும்தான் ஒரே வழி!

எச்சரிக்கை: கோவிட் தொற்று - அபாயம் இன்னும் நீங்கிவிடவில்லை; தடுப்பூசியும் முகக்கவசமும்தான் ஒரே வழி!

தமிழ்நாட்டில் கோவிட் தொற்று பரவல் அபாயம் நீங்கிவிடவில்லை. மாதந்தோறும் குறைந்தபட்சம் 20 நோயாளிகள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, மீண்டு வருகிறார்கள். கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். முகமூடிதான் இன்னும் பாதுகாப்பு கவசமாக இருந்து வருகிறது.

இன்றைய நிலையில் தமிழகமெங்கும் 96 கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். இவர்களில் 14 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் வளைகுடா நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்.

கோவையில் மட்டும் 4 கொரானா நோயாளிகளுக்கும் சென்னையில் 3 நோயாளிகளுக்கும் சமீபத்தில் தொற்று உறுதியாகியிருக்கிறது. இதுவரை 9 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். 96 நோயாளிகளில் 24 பேர் கோவையைச் சேர்ந்தவர்கள். 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்,

கடந்த மாதத்தில் 3867 சாம்பிள் கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் மூவாயிரத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனை டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலையில் தமிழகத்தின் பாசிடிவிட்டி ரேட், 0.5 சதவீதமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா தொற்று அபாயம் இன்னும் தொடர்கிறது. அடியோடு ஒழிந்துவிட்டதாக கருதமுடியாது என்று உலக சுகாதார நிறுனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியுமான சவுமியா சுவாமிநாதன் தெரிவித்திருக்கிறார்.

சென்னை தரமணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில் நடந்த தேசிய அறிவியல் தினம் விழாவில் கலந்து கொண்டவர், கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஒரு ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடிக்க முடிந்தது நம்முடைய சாதனை. கொரோனா தொற்று அடியோடு ஒழிந்து விட்டதாக நினைக்க முடியாது. 27 வகையிலான கொரோனா வைரஸ்கள் உள்ளதால் எந்த வகை வைரஸ் எப்போது, தாக்கும் என கணிக்க முடியாது என்றார்.

கொரானா வைரஸ் மனிதர்களுடன் வாழும். அதை முற்றிலுமாக நீக்கிவிடமுடியாது. தடுப்பூசியினாலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் மட்டுமே நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது இன்றும் அவசியமாகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com