1 வாரத்துக்கு 2 ஆயிரம் கொசுக்களை பரிசோதிக்கிறோம்; தமிழக பொது சுகாதாரத்துறை!

ஏடிஸ் பெண் கொசு
ஏடிஸ் பெண் கொசு

தமிழகத்தில் டெங்கு நோயைப் பரப்பக் கூடிய கொசு வகைகளைத் தடுக்கும் வகையில் ஒரு வாரத்துக்கு 2 ஆயிரம் கொசுக்கள் பரிசோதனை செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது;

மழைக்காலங்களில் ஏடிஸ் வகை பெண் கொசுக்கள் மூலமாக டெங்கு நோய் பரவுகிறது. எனவே ஒரு பகுதியில் உள்ள ஏடிஸ் பெண் கொசுக்களை பிடித்து அதில் டெங்கு நோய் பரப்பும் வைரஸ் உள்ளதா என பரிசோதித்து அதன் மூலம் எந்தெந்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கிறது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த உத்தி தற்போது மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டை 700 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 21 நாட்களுக்கு ஒரு முறை கொசு மாதிரிகள் அனுப்பப்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இது நடைமுறை கடைபிடிக்கப் படுகிறது.

-இவ்வாறு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com