உதயநிதிக்கு எந்த இடத்தில் இருக்கை?

   உதயநிதிக்கு எந்த இடத்தில் இருக்கை?

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் 34 அமைச்சர்களைக் கொண்ட தி.மு.க. அரசு கடந்த மே மாதம் பொறுப்பேற்றது.  அதன் பின் 18 மாதங்களுக்குப் பிறகு  உதயநிதிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கி தற்போதுதான் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டாலின் ஆட்சியமைக்கும் போதே, உதயநிதியின் பெயர் அமைச்சர்கள் லிஸ்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

இதனிடையே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், மூத்த அமைச்சர்களும் ஸ்டாலினை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

திமுக அமைச்சரவையின் 35ஆவது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதுதவிர, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்புத்திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் துறைகளும் உதயநிதிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், திமுக அமைச்சரவை சீனியாரிட்டி பட்டியலில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த இடத்தில் அமர்வார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தொடர் குறித்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “புதிய அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருக்கு நடுவில் உள்ள இருக்கையில் அமர்வார்.” என தெரிவித்தார்

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு அவை கூட இருப்பதாகவும் அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி எத்தனை நாள் கூட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com