அமைச்சரை ஆச்சரியப்படுத்திய அந்த நபர் யார்...!

அமைச்சரை ஆச்சரியப்படுத்திய அந்த நபர் யார்...!

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்றை தினம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்னை விமானநிலையத்தை நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, வழியில் இருசக்கர வாகனத்தில் வியாபாரம் செய்துக்கொண்டிருந்த நரிகுறவர் சமூகத்தை சேர்ந்தவரை நேரில் அழைத்து பாராட்டினார்.

அமைச்சர் சுப்பிரமணியனின் இந்த செயல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அமைச்சர் அழைத்து பாராட்டிய அந்த நபரின் பெயர் மணிகண்டன் என்பதும், அவர் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. பொதுவாக நரிகுறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வண்ண மணிகளை விற்பனை செய்துவரும் நிலையில், தன்னுடைய பழைய தொழில்முறையை விடுத்து காலத்திற்கு ஏற்ற தொழிலை தன்னம்பிக்கையுடன் நடத்திவரும் மணிகண்டன் செயல் அமைச்சர் ஈர்த்துள்ளது. இதன்காரணமாக அவசர அவசரமாக விமான நிலையம் சென்றுக்கொண்டிருந்த நிலையிலும், வியாபாரம் செய்துகொண்டிருந்த மணிகண்டனைப் பாராட்டி அவருக்கு கை கொடுத்து ஊக்கமளித்து பின் அங்கிருந்து சென்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.

50 வயதை கடந்த மணிகண்டன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில், பட்டாணி, வேர் கடலை, உப்பு கடலை, இளந்தை பழம் அடை மற்றும் ஏராளமான நெருக்கு தீனிகளை விறபனைச் செய்துவருகிறார். உணவு பொருட்களை சிறு சிறு பொட்டலங்களாக்கி அதை ஒழுங்குற இரு சக்கர வாகனத்தில் அடுக்கி எடுத்துச் சென்று வாடிக்கையாளர்கள் பண செலுத்த வசதியாக GPay/Paytm வசதியுடன் விற்பனை செய்வது என்பது அவரது தன்னம்பிக்கை மற்றும் கடினமாக உழைக்கும் பண்பைக் காட்டுகிறது. அந்தப் பண்பு தான் அமைச்சரிடம் இருந்து அவருக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்திருக்கக் கூடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com