பிளஸ் 2வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதாதது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

பிளஸ் 2வில்  50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  தேர்வெழுதாதது ஏன்? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியுள்ள நிலையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளாதது ஏன் ? அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகள் முன்வரவேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார் .

2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் +2 தேர்வு எழுதும் மாணவர்களில் 50,674 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வை வழக்கமான மாணவர்களோடு, தனித் தேர்வர்கள்‌ 23,747 பேர், மாற்றுத்‌ திறனாளிகள் 5,206 பேர், 90 சிறைவாசிகள் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுதினர். புதுச்சேரி மாணவர்கள் 14,710 பேர் சேர்த்து, இந்த எண்ணிக்கை 8,51,303 ஆக இருந்தது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வெழுத மொத்த மாணவர்களின் எண்ணிக்கை, வராதோர் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்து கலெக்டரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வராததற்கான காரணங்களை கேட்டறிந்து, பள்ளிகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் வராதோர் விவரங்களை சரிபார்க்க தேர்வு மையங்களில் துறையினர் கண்காணித்து வருகின்றனர். மொழித் தாளுக்கு அதிக அளவில் வராதது துறைகள் மற்றும் ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்கள் வராததற்கான காரணம் குறித்து அந்தந்த பள்ளிகளிடம் கல்வி வாரியம் தகவல் கேட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் மொழித்தாளுக்கு 889 மாணவர்கள் வரவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 50,674 மாணவ மாணவிகள் பிளஸ் டூ தேர்வு எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com