பெண்களுக்கான விழிப்புணர்வு சைக்கிள் பயணம்.

பெண்களுக்கான விழிப்புணர்வு சைக்கிள் பயணம்.

லக அளவில் இந்தியா பெண்களின் பாதுகாப்புக்கு உகந்த நாடு என்று பெருமைப்பட்டாலும், பெண் களுக்கான பாதுகாப்பு மற்றும் அதிகாரங்களில் இன்னும் பின்தங்கியுள்ள நிலையை பல இடங்களில் நிகழும் சம்பவங்கள் மற்றும் செய்திகள் மூலம் அறிகிறோம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து சமூகம்மேல் அக்கறை கொண்ட பலர் பல விதங்களில் விழிப்புணர்வையும் தந்து வருகின்றனர். அந்த வரிசையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஆஷாவும் இணைகிறார். இதோ அவர் குறித்தான தகவல்கள்.   
        பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் அதிகாரம் குறித்து பட்டதாரி பெண்ணும் மலையேற்ற வீராங்கனை யுமான ஆஷா மால்வியா எனும் 19 வயது இளம்பெண் இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவர் மத்தியப்பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தைச்சேர்ந்த நட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர். மலையேற்றத்தில் சாதனை படைத்த வீராங்கனையான இவர் நாடு முழுவதும் 28 மாநிலங்களில் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டு மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகரில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி பயணத்தை துவங்கினார்.

       இவரது திட்டத்தின்படி போபாலில் துவங்கி குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, என எட்டு மாநிலங்களில் பயணத்தை முடித்து தற்போது தமிழ்நாட்டில் வலம் வருகிறார். நேற்று (09-01-2023) சேலம் கலெக்டர் அலுவலகம் வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பாலச்சந்திரன் பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.    

        தொடர்ந்து சாகச பெண்ணிற்கு அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த சக பெண் காவலர்களும் சேலம் மாவட்ட சுற்றுலா அலுவலரான உமாதேவியும் வாழ்த்தளித்து வழியனுப்பி வைத்தனர். சேலத்தில் இருந்த புறப்பட்ட ஆஷா மால்வியா தர்மபுரி செல்கிறார். அதனைத் தொடர்ந்து  தர்மபுரி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சைக்கிள் பயணத்தை தொடரும் ஆஷா ஆல்வியா ஆந்திர பிரதேச மாநிலம் ஹைதராபாத் செல்ல உள்ளார். அங்கிருந்து ஒவ்வொரு மாநிலமாக சைக்கிள் பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளார்.

னது பயணம் குறித்து ஆஷா மால்வியா  “நவம்பர் ஒன்றாம் தேதி போபாலில் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினேன். இதுவரை மத்திய பிரதேசம் குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என ஏழு மாநிலங்களைக் கடந்து பயணத்தை தொடர்ந்து வருகிறேன்.  100 நாட்களில் 7,300 கிலோமீட்டர் பயணத்திருக்கிறேன்.  252 நாட்களில் 25 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை விளக்கும் வகையில் எனது பயணம் அமைந்துள்ளது. கர்நாடகா, கேரளா மாநில முதலமைச்சர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற நான் தமிழகத்திலும் அமைச்சர்களை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை எனக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதில் சிறந்த மாநிலமாக உள்ளது. மூன்றாவது வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதாகவும் கூலி வேலை செய்து தாய் தன்னை முதுகலை பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளதாகவும்” கூறினார்.

     வாழ்வில் முன்னேறி மற்ற பெண்களுக்கு உதாரணமாக திகழவேண்டும் எனும் ஆர்வத்துடன் தனியொரு பெண்ணாக சைக்கிளில் பயணித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆஷா பாராட்டுக்குரியவர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com