தமிழக வெற்றிக் கழகத்துக்கு என்னாச்சு? புரிஞ்சு பேசுங்க! 

Tamizhaga vetri kazhagam.
Tamizhaga vetri kazhagam.
Published on

கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியதில் இருந்தே, அது தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதையடுத்து அக்கட்சியின் கொடி, சின்னம் குறித்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன. 

பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வதற்கு செயலி ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் அந்தக் கட்சியில் மூன்றே நாளில் 50 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய் கட்சியின் தலைவராக இருப்பதால், தொடர்ந்து சமூகத்தில் நடக்கும் விஷயங்களுக்கு தனது கருத்தைக் கூறி வருகிறார். 

அப்படிதான் தற்போது CAA சட்டத்திற்கு எதிரான தனது குரலை எழுப்பியுள்ளார் விஜய். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில் இலகுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. 

ஆனால் ஏற்கனவே திமுக இந்த சட்டத்திற்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்தது மட்டுமின்றி, தமிழகத்தில் CAA சட்டம் செல்லாது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் இப்போது வந்து விஜய் ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் எனச் சொல்வதால், யாராவது விஜய்க்கு எடுத்துச் சொல்லி புரிய வையுங்கள் எனப் பலரும் ட்விட்டரில் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

ஏற்கனவே கட்சி தொடங்கப்பட்ட அறிவிப்பில் இருந்த எழுத்துப் பிழைகளால் விஜய் வறுத்தெடுக்கப்பட்ட நிலையில், இப்போது என்னவென்றே தெரியாமல் ஏதோ எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஒரு அறிக்கையை வெளியிட்டு, மேலும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com