அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இரு தலைவர்களும் பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று எனது அன்பு நண்பர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான வரி இனி 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்ட வரி விதிக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டதற்கு 140 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து பணியாற்றும்போது, அது மக்களுக்கு பயன் அளிப்பதுடன் இரு தரப்பும் பரஸ்பரம் பயன்பெறும் வகையில் ஏராளமான வாய்ப்புகளை திறந்துவிடும்.
உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு டிரம்ப்பின் தலைமை மிகவும் முக்கியமானது. டிரம்ப்பின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும். நமது உறவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்ல இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.