"டாஸ்மாக்" போனஸ் அறிவிப்பு! ஊழியர்கள் மகிழ்ச்சி!

டாஸ்மாக் ஊழியர்கள்
டாஸ்மாக் ஊழியர்கள்

தமிழக மது கடையில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு, 10 சதவீதம் 'போனஸ்' வழங்க, 'டாஸ்மாக்' நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனம் வாயிலாக பல்வேறு மதுபான வகையை விற்பனை செய்து வருகிறது.

அந்த கடைகளில், 6,715 மேற்பார்வையாளர்கள்; 15 ஆயிரம் விற்பனையாளர்கள்; 3,090 உதவி விற்பனையாளர்கள் என, மொத்தம் 24 ஆயிரத்து 805 பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு போனஸ் வழங்கப்படுகிறது.

டாஸ்மாக் கடை
டாஸ்மாக் கடை

மதுபான வகைகள் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி வாயிலாக, தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது.

எனவே, தீபாவளிக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணை தொகை என, மொத்தம் 10 சதவீதம் போனஸ் வழங்குமாறு, மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதன் வாயிலாக, மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்கள் என, அனைவருக்கும் தலா 8,400 ரூபாய் போனஸ் தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com