இனி ஒன்லி MRP! டாஸ்மாக் கடைகளில் கூவிக் கூவி மதுவிற்பனை! திடீர் மாற்றத்துக்கு பின்னால் என்ன நடந்தது?

"எம்ஆர்பி விலை மட்டும்தான்!" கோவில்பட்டி ஊழியர்களின் அதிரடியும், பின்னணியில் இருக்கும் அமைச்சர் எச்சரிக்கையும்!
tasmac
tasmacsource:oneindia
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை எதுவும் வசூலிக்கப்படாமல், நிர்ணயிக்கப்பட்ட எம்ஆர்பி (MRP) விலைக்கு மட்டுமே மதுபானங்கள் விற்கப்படுவது குறித்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வைரலாகி வருகின்றது.

5 ரூபாய் கூடுதல் கிடையாது கரெக்டா எம்ஆர்பி விலை மட்டும்தான் என்று டாஸ்மாக் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் உரக்கக் கூவிக் கூவி மது விற்பனை செய்து வருகின்றார்கள்.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மற்றும் டாஸ்மாக் நிறுவனம் எச்சரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மற்றும் அரசின் கடுமையான நடவடிக்கைகளின் எதிரொலியாக ஊழியர்கள் இந்த முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்கள்.

கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூடுதல் விலை எதுவும் பெறாமல் அரசு நிர்ணயித்த எம்ஆர்பி விலைக்கு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பாட்டில் திரும்பப் பெறுவதற்கான தொகை ரூபாய் 10 மட்டும் சேர்த்து சரியான விலைக்கு விற்கப்படுவதாகக் கூறி, அதனை ஊழியர்கள் கூவிக் கூவி பொதுமக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இப்படி கூவிக் கூவி மது விற்பனை செய்யும் சுவாரசியமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா?

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அண்மையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்ததுடன், மது பாட்டில்களுக்கு எம்ஆர்பி விலையை விட ஒரு ரூபாய் கூடுதலாக வாங்கினாலும் 3 மாத சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று கூறியுள்ளார். அத்துடன் இரண்டாவது முறை தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் கூடுதல் விலை கிடையாது. கரெக்டா எம்ஆர்பி விலை தான் வாங்குகிறோம் என்று ஊழியர்கள் சத்தம் போட்டு வாடிக்கையாளர்களை அழைத்து மது விற்று வருகின்றனர்.

காலி பாட்டில்களைத் திரும்ப பெறுவதற்காக அரசு நிர்ணயித்துள்ள ரூபாய் பத்து கட்டணம் மட்டுமே எம்ஆர்பி விலையுடன் சேர்த்து வாங்கப்படுகிறது.

இது குறித்த புகார்களைத் தெரிவிக்க வேண்டிய வாட்ஸ்அப் எண்களும் கடைகளில் பொது மக்களின் பார்வைக்கு ஒட்டப்பட்டுள்ளன.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ஊதிய உயர்வு, கடைகளில் தூய்மை பணி மேற்கொள்ள மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இனி ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் சமீபத்தில் அறிவித்தது நன்கு வேலை செய்கிறது.

அத்துடன் டாஸ்மாக் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் ஊழியர்கள் தற்போது அரசு நிர்ணயித்த விலைக்கு மதுவை விற்கத் தொடங்கியுள்ளனர்.

அரசின் கடுமையான விதிகள் மற்றும் அதிரடி சஸ்பெண்ட் நடுவடிக்கைகளுக்கு பயந்து ஊழியர்கள் தங்களது வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த அதிரடி மாற்றத்தை கையில் எடுத்துள்ளதாக பொதுமக்கள் பேசி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
மறுபடியும் ஹாலிவுட் கதையா? துல்கர் சல்மானின் 'I, M Game' எப்படி இருக்கு? – உண்மையான விமர்சனம்!
tasmac
logo
Kalki Online
kalkionline.com