ஏர் இந்தியாவில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்திய டாடா குழுமம்!

AIR INDIA NEW LOGO
AIR INDIA NEW LOGO

ந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடா குழுமம் வாங்கிய பிறகு, பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. தற்போது அந்த நிறுவனத்தின் லோகோ, பணியாளர்களின் சீருடை போன்ற பல்வேறு விஷயங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக விளங்கிய ஏர் இந்தியா, கடன் பிரச்னை காரணமாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் டாடா குழுமத்திடம் விற்பனை செய்யப்பட்டது.

மேலும், ‘போதிய வருமானமின்மை, கடன் தொகை அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்படுகிறது’ என்று மத்திய அரசு கூறியது. அதைத் தொடர்ந்து டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஏர் இந்தியா நிறுவனத்தின் லோகோவை தற்போது மாற்றி உள்ளது. பறக்கும் அன்னப்பறவை போன்ற வடிவில் இலச்சினையை தற்போது அறிமுகம் செய்துள்ளது. மேலும், வணிக அடையாளம் மற்றும் பணியாளர் சீருடைகளிலும் தற்போது ஏர் இந்தியா நிறுவனம் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அது மட்டுமல்ல, ஏர் இந்தியா நிறுவனத்தை பல்வேறு புதிய வழித்தடங்களுக்கு இயக்குவதற்கான பணிகளையும் தற்போது தீவிரமாக செய்து வருகிறது டாடா குழுமம்.

இதுகுறித்துப் பேசிய டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன், ‘ஏர் இந்தியா நிறுவனத்தை இந்தியாவின் அனைத்து விமான வழித்தடங்களிலும் இயக்குவதற்கான பணிகள் மற்றும் கூடுதல் விமான சேவையை தொடங்குவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பயண நேரத்தை குறைப்பதற்காக முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் நேரடி விமானங்களை அதிகப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தற்போது செய்யப்பட்டுவரும் இந்தத் தொடர் மாற்றங்கள், உலகின் முன்னணி விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமாக ஏர் இந்தியாவை மாற்றும். அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், அதிக அளவிலான மக்கள் தற்போது விமான சேவையைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்கான சிறப்பு சலுகைகளுடன் கூடுதல் திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளது‘ என்று அவர் கூறி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com