

நாம் வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் பாஸ்போர்ட் மிகவும் முக்கியம். இது நமது பயணம் ஆவணமாக மட்டும் அல்லாமல் அடையாள ஆவணமாகவும் உள்ளது. இந்நிலையில், போலி பாஸ்போட்களை தடுக்க மற்றும் சேவைகளை எளிதாக மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. நீங்க புதுசா பாஸ்போர்ட் எடுக்க போறீங்கன்னா இந்த விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். வாங்க இதுகுறித்து இப்போ விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
ஆவணங்கள்
* புதிதாக பாஸ்போர்ட் எடுக்கும் போது சில சான்றிதழ்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில் பிறப்பு சான்றிதழ், 10-ம் வகுப்பு மார்க் சீட், அரசின் பிறந்த தேதி பதிவு ஆகியவை இருந்தால் போதும் நாம் புதிய பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
* அடுத்ததாக அடையாள சான்றுக்கு ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை தேவைப்படும்.ஆதார் கார்டு இருக்கும் பட்சத்தில் உங்கள் பாஸ்போர்ட் நடைமுறை மிகவும் எளிதில் முடிந்து விடும்.
* முகவரி சான்றிற்கு நீங்கள் ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக், சிலிண்டர் பில், தண்ணீர் பில் போன்றவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் போதுமானது.
* அதேசமயம் சிறப்பு நிலை எனும் போது கூடுதல் சான்றுகள் தேவைப்படும். அதாவது, பெயர் மாற்றம் செய்திருந்தால் பெயர் மாற்ற சான்றிதழ் தேவைப்படும். அதேபோல் திருமணத்திற்கு பிறகு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் திருமண சான்றிதழ் தேவைப்படும். அதேபோல் உங்கள் குழந்தைக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்றால் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் குழந்தையின் அப்பா, அம்மா தகவல்கள் இருந்தால் போதும் ஈஸியாக பாஸ்போர்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
புதிய மாற்றம்
* 1.10.2023 அன்று அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க பிறப்பு சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த தேதிக்கு முன் பிறந்தவர்களுக்கு மேற்குறிப்பிட்ட 10-ம் வகுப்பு மார்க் சீட் போன்ற ஆவணங்கள் போதுமானதாகும்.
* இனிவரக்கூடிய பாஸ்போர்ட்டில் எல்லாவற்றிலும் சிப்(chip) இருக்கக்கூடிய பாஸ்போர்ட் தான் வரப்போகிறது. அதனால், உங்கள் தகவல்கள் அனைத்தும் இனிமேல் டிஜிட்டலாக சேமித்து வைக்கப்படும். இது நம்முடைய பாதுகாப்பிற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
* இதற்கு முன்பெல்லாம் உங்களது முகவரி விவரங்கள் அனைத்தும் பாஸ்போர்டின் பின்புறம் தான் பிரிண்ட் செய்வார்கள். முன்பு உங்கள் முகவரி சான்றுகள் அனைத்தும் பாஸ்போர்டின் பின்புறம் தான் பிரிண்ட் செய்வார்கள். ஆனால், இனி ஒரு கோர்ட் (code)கொடுத்து விடுவார்கள். அந்த கோர்டை ஸ்கேன் செய்தால் தான் அதிகாரிகளே உங்கள் அட்ரஸை பார்க்க முடியும். உங்களது பாஸ்போர்ட் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக இந்த முகவரி மறைவு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
* ஆன்லைன் அப்ளிகேஷன், சரிபார்ப்பு, verification போன்ற சேவைகள் வேகமான நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சுருக்கமாக சொல்லவேண்டுமானால் பாஸ்போர்ட் எடுப்பதற்கான சேவை எளிதாக இருக்கு, பாதுகாப்பு அதிகமாக உள்ளது, பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்ற ஒரு விதி மட்டும் தான் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தட்கல் முறையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
புதிய விதிகளின்படி பாஸ்போர்ட்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று அறிந்துகொள்ளலாம் வாங்க.
புதிய விதிகளின் படி, நீங்கள் முதலில் ஆன்லைன் ரெசிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும். அதற்கு பாஸ்போர்ட் சேவா இணையதளத்திற்கு சென்று முதலில் உங்களுடைய user name, password வைத்து Registration செய்ய வேண்டும்.
அடுத்ததாக விண்ணப்பிங்களை முழுவதுமாக பூர்த்தி செய்துவிட்டு தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் (பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு போன்ற சான்றிதழ்கள்) செய்ய வேண்டும்.
அடுத்தபடியாக, மத்திய அரசின் சேவை மையமான பாஸ்போர்ட் சேவா கேந்திரா(PSK) அல்லது போஸ்ட் ஆபிசுடன் சேர்ந்து செயல்படக்கூடிய பாஸ்போர்ட் சேவை மையமான, போஸ்ட் ஆபிஸ் பாஸ்போர்ட் சேவா கேந்திரா(POPSK) ஆகிய இடங்களில் சென்று உங்கள் தேதி, நேரத்தை பதிவு செய்து அப்பாண்ட்மெயிண்டை செய்து கொள்ளலாம். மத்திய அரசு பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு செல்லும் போது உங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து செல்ல வேண்டியது கட்டாயம்.
தற்போது இருக்கும் புதிய நடைமுறைப்படி போலீஸ் வெரிஃபிகேஷன் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. அதாவது, உங்கள் விண்ணப்பா சான்று, கிரிமினல் ரெக்கார்ட் எல்லாவற்றையும் அவர்கள் டேடா பேஸில் செக் செய்த பின்னர் காவல்துறைக்கு சந்தேகம் இருந்தால் மட்டுமே அவர்கள் வீட்டிற்கு வந்து பார்ப்பார்கள். டேடா பேஸ் மூலம் வெரிஃபிகேஷன் செய்துவிட்டால் உங்கள் போனுக்கு வெரிஃபைட் என்ற குறுஞ்செய்தி வரும்.
அப்படிஇல்லாமல் உங்களது பார்ஸ்போர்ட் ஸ்டேடஸ் நிலையை பற்றி தெரிந்து கொள்ள பாஸ்போர்ட் சேவா வெப்சைட்டிற்கு சென்று செக் ஸ்டேடஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களுடைய ஸ்டேடஸ் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த போலீஸ் வெரிஃபிகேஷன் 4 வாரங்களில் முடிந்துவிடும்.
போலீஸ் நடைமுறைகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் முடிந்த உடன் உங்களது பாஸ்போர்ட் 3 அல்லது 4 வாரங்களில் கொரியர் அல்லது தபால் மூலம் உங்கள் கைக்கு வந்துவிடும். ரொம்ப அவசரம் என்றால் வெரிஃபிகேஷன் இல்லாமல் கூட நீங்கள் பாஸ்போர்ட்டை விண்ணப்பிக்கலாம். அதற்கு தட்கல் முறை என்று பெயர். இந்த முறையில் நீங்கள் விண்ணப்பித்தால் 7-5 நாட்களில் பாஸ்போர்டை பெற்று கொள்ளலாம்.
பாஸ்போர்ட் எடுப்பது இனிமேல் மிகவும் சுலபம் மற்றும் பாதுகாப்பானதும் கூட. பாஸ்போர்ட் எடுக்கும் முறையை திறமையாகவும், வெளிப்படை தன்மையாகவும் மாற்றுவதற்கு தான் மத்திய அரசு தற்போது இந்த புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.