என்னது.. சம்பளம் இரட்டிப்பா ? டிசிஎஸ் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி!

என்னது.. சம்பளம் இரட்டிப்பா ?  டிசிஎஸ் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி!

உலகின் முன்னணி டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், டிசிஎஸ் தனது ஊழியர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் ஒரு முக்கியமான வாய்ப்பை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்திய ஐடி துறையில் முக்கியமான மாற்றத்தை செய்ய உள்ளது டிசிஎஸ்.

டிசிஎஸ் நிறுவனத்தின் உலகெங்கும் 6 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வரும் வேளையில், டிசிஎஸ் மனிதவள பிரிவு அதிகாரியான மிலிந்த் லக்கார்ட் தலைமையிலான strategy குழு புதிதாக சேரும் பிரஷ்ஷர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுப்பதை காட்டிலும் நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு Upskill செய்வதில் முதலீடு செய்து அவர்கள் வளர வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது.

டாடா குழுமத்தின் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மந்தமான வர்த்தக சூழ்நிலையில் தொடர்ந்து ஊழியர்களை சேர்ப்பது மட்டும் அல்லாமல், ஊழியர்கள் மத்தியில் இருக்கும் ஊதிய வேறுபாடு அதாவது pay disparity அளவை குறைக்கும் முக்கிய முயற்சியில் இறங்கியுள்ளது. பெரிய நிறுவனங்களில் ஜூனியர் மற்றும் சீனியர் உயர் அதிகாரிகளுக்கு மத்தியில் எப்போதும் அதிகப்படியான சம்பள வித்தியாசம் இருக்கும் இதை குறைக்கும் முயற்சியில் தான் டிசிஎஸ் தற்போது இறங்கியுள்ளது. இந்த முயற்சியில் பல ஜூனியர் ஊழியர்களின் சம்பளம் இரட்டிப்பாகவும் வாய்ப்பு உள்ளது என்பது தான் முக்கியமான விஷயம்.

உதாரணமாக டிசிஎஸ் நிறுவனம் Elevate என்னும் திட்டத்தை வைத்துள்ளது இதில் 0 முதல் 12 வருட அனுபவம் கொண்ட 4 லட்சம் ஊழியர்கள் இணைந்து தங்களுடைய திறனை மேம்படுத்தி வருகின்றனர். இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் உயர் மதிப்பெண்கள் உடன் தேர்ச்சி பெறுவோர் சம்பளம் இரட்டிப்பாகும் வாய்ப்பை பெற உள்ளனர் என மிலிந்த் லக்கார்ட் மினிகன்ட்லோர்-க்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com