பணிநீக்கம் இல்லை...சம்பள உயர்வு உண்டு! ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய டிசிஎஸ் நிறுவனம்!

பணிநீக்கம் இல்லை...சம்பள உயர்வு உண்டு! ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய டிசிஎஸ் நிறுவனம்!
Published on

சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியான நிலையில் ஐடி துறையில் மிக மோசமான பணி நீக்க நடவடிக்கைகள் என்பது சாதாரணமாக இருந்து வருகின்றது.

ஆனால் டிசிஎஸ் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பினை கொடுத்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

டிசிஎஸ் நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு பணி நீக்கம் என்பது இருக்க வாய்ப்பில்லை. எனினும் விரைவில் சம்பள அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு என்பது வரலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் டிசிஎஸ் நிறுவனம் பணி நீக்கம் என்பதை கருத்தில் கொள்ளவில்லை. ஒரு ஊழியரை பணியில் அமர்த்தியதும் நீண்டகால திறமைகளை வளர்ப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்திலும் இப்படி ஒரு நிகழ்வு வருமோ என்ற அச்சத்தில் இருந்த ஊழியர்களுக்கு, இது பெரும் ஆறுதலாய் அமைந்துள்ளது எனலாம்.

இது குறித்து டிசிஎஸ் நிறுவனத்தில் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் நிறுவனம், முந்தைய ஆண்டுகளை போல ஊழியர்கள் ஊதிய உயர்வுகளை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார் . டிசிஎஸ் நிறுவனத்தில் பணி நீக்கம் என்பது இல்லை. அதே சமயம் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் சம்பள உயர்வானது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் பணி நீக்கம் என்பதும் இல்லை. அதே சமயம் சம்பள அதிகரிப்பு என்பது இருக்கும் என கூறி, டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் மற்ற நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யும் ஊழியர்களை, டிசிஎஸ் பணியமர்த்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

ஒரு முறை ஊழியர் நிறுவனத்தில் இணைந்துவிட்டால், அவரின் திறனை அதிகரிக்க வேண்டியது நிறுவனத்தின் பொறுப்பாகும். தேவைப்படும் திறன் மற்றும் ஊழியரின் திறனுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படுகிறது என்கிறது டிசிஎஸ் நிறுவனம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com