இனி டிடிஎஸ் குறித்த சந்தேகங்களுக்கு கவலையில்லை.. வந்தாச்சு டிடிஎஸ் நண்பன் ஆப்!

மாதிரி படம்
மாதிரி படம்Intel

பொதுவாகவே வேலை பார்க்கும் அலுவலகங்களில் நமக்கு பிஎஃப் பிடிப்பார்கள். அப்படி இல்லையென்றால் டிடிஎஸ் பிடிப்பார்கள். வருமான வரி, நேரடி வரி, மறைமுக வரி என பல்வேறு வகையான வரிகளை அரசு வசூல் செய்கிறது. தனிப்பட்ட வருமானத்தில் இருந்து நேரடியாக அரசாங்கத்திற்கு நேரடி வரி செலுத்தப்படுகிறது. மறுபுறம், மறைமுக வரிகள் என்பது விற்பனையாளர்கள் அரசாங்கத்திடம் செலுத்த வேண்டிய வரியாகும்

மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (டிடிஎஸ்), மற்றும் மூலத்தில் சேகரிக்கப்பட்ட வரி (டிசிஎஸ்) ஆகியவை அரசாங்கத்தால் விதிக்கப்படும் மறைமுக வரிகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

பிஎஃப் பிடிக்கப்படும் ஊழியர்கள், அவர்களுக்கு எவ்வளவு பணம் ஏறுகிறது என்றும் அதனை எளிதில் பெற்றுகொள்ளும் வகையிலும் இணையதளத்தில் பல வசதிகள் உள்ளன. ஆனால் டிடிஎஸ் பிடிப்பவர்களுக்கு எந்த ஓரு ஆவணங்களும் கிடையாது. டிடிஎஸ் பணத்தையே ஆடிட்டர் மூலம் தான் ஊழியர்கள் பெறுவார்கள். இனி இந்த துயரத்தை போக்கும் வகையில் அட்டகாசமான ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப் பெயர் தான் டிடிஎஸ் நண்பன்.

TDS nanban
TDS nanbanIntel

இந்தச் செயலி சென்னை வருமான வரி முன்னாள் தலைமை கமிஷனர் ரத்தினசாமி முன்னிலையில் சென்னை வருமான வரி முதன்மை தலைமை கமிஷனர் சஞ்சய்குமார் வர்மா சமீபத்தில் தொடங்கி வைத்தார். இந்தச் செயலியை ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் இரண்டிலுமே பதிவிறக்கம் செய்யலாம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி இணையதளம் (www.tnincometax.gov.in) மூலமும் இந்த சாட்பாட்டுடன் உரையாட முடியும். இந்தச் செயலி 24*7 செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியை நீங்கள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து இனி வீட்டில் இருந்தே பயன் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com