20 வகை வேலைகள் பறிபோகும்! சவால் விடும் GPT-4!

20 வகை வேலைகள் பறிபோகும்! சவால் விடும் GPT-4!

லகில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த விஷயங்கள் அதிகரித்து வருகின்றன. இதுவரை பல மணி நேரங்கள் செலவிட்டு செய்து வந்த வேலைகள் கூட, இந்த AI தொழில்நுட்பம் மூலமாக சில நிமிடங்களில் முடித்து விடும் அளவுக்கு திறன் படைத்ததாக அமைந்து விடுகின்றன. இதனால் மனிதர்களின் என்னென்ன வேலைகள் காணாமல் போகப்போகிறது எனத் தெரியுமா? 

OpenAI நிறுவனம் சமீபத்தில் சேட் ஜிபிடி-ன் புதிய பதிப்பான GPT-4ஐ அறிமுகப்படுத்தியது. இந்த தொழில்நுட்பம் ChatGPT-ன் செயல்களுக்கு அப்பாற்பட்ட செயல்களை செய்யும் சக்தி வாய்ந்த ஏஐ மாடலாகக் கூறப்படுகிறது. கொடுக்கும் உள்ளீடுகளுக்கு ஏற்ற வகையில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, காணொளி, புகைப்படம், ஆடியோ போன்றவற்றை இதனால் வடிவமைக்க முடியும். இந்த புதிய ஏஐ மாடல் மனிதர்களின் பல்வேறு விதமான வேலைகளையும் மாற்றியமைக்கப் போகிறது. இன்னொரு வகையில் பல பேருடைய வேலை பறிபோகப்போகிறது என்றும் கூறலாம். 

GPT-4 தொழில்நுட்பம் மனிதர்கள் மிகவும் விரும்பும் வகையில் உருவாக்கப்பட்ட ஒன்று. இதன் செயல்பாடு மிகவும் திறன் வாய்ந்ததாகவும் சீராகவும் இருக்கும். ஆங்கில மொழி ஆசிரியர்கள், டெலி மார்க்கெட்டர்கள், நகல் எழுதுபவர்கள் போன்ற வேலைகள் இந்த ஏஐ வந்த பிறகு வெளிப்படையாக மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறி வருகிறார்கள். 

AI தொழில்நுட்பத்தால் என்னதான் சில வேலைகள் மாற்றப்படுவதாக இருந்தாலும், மனிதர்கள் தரும் அதே மதிப்பை இதனால் கொடுக்க முடியாது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

இதைப் பற்றி GPT-4 தொழில்நுட்பமே சில விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளது. உன்னால் எந்தெந்த வேலைகள் மாற்றப்படலாம் என்ற கேள்விக்கு, 20 வேலைகளின் பட்டியலை சரசரவென எழுதிக் காட்டியுள்ளது. 

 1. டேட்டா என்ட்ரி கிளர்க்.

 2. சந்தை ஆராய்ச்சி ஆய்வாளர்

 3. டிராவல் ஏஜென்ட்.

 4. வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி.

 5. சமூக ஊடக மேலாளர்.

 6. ஆசிரியர்.

 7. சரிபார்ப்பவர்.

 8. நியமனம் திட்டமிடுபவர்.

 9. டெக்னிக்கல் சப்போர்ட் அனலிஸ்ட்.

 10. டெலி மார்க்கெட்டர்.

 11. இமெயில் மார்க்கெட்டர்.

 12. கன்டென்ட் மாடரேட்டர்.

 13. விர்ச்சுவல் அசிஸ்டன்ட்.

 14. புக் கீப்பர்.

 15. ட்ரான்ஸ்லேட்டர். 

 16. காப்பி ரைட்டர்.

 17. நியூஸ் ரிப்போர்ட்டர்.

 18. ட்ரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட்.

 19. சட்ட உதவியாளர்.

 20. பணியமர்த்துபவர்.

போன்ற வேலைகள் இதில் அடங்கும். மேலும் எதிர்காலத்தில் பல முன்னேற்றங்களைப் பெற்று மனிதப் பண்புகளுக்கு நிகராக செயல்பட்டு, அவர்களுக்கு மாற்றாக இருக்க முடியும் எனவும் தெரிவித்தது. 

வேகம், துல்லியம், தகவல் தொடர்பு, விவரங்களில் கவனம் செலுத்துதல், ஆராய்ச்சி மற்றும் அமைப்பு போன்ற மனித பண்புகளைப் அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வேலை அனைத்தையும், AI தொழில்நுட்பம் அபகரிக்கும் என்று ஒரு AI தொழில்நுட்பமே தெரிவித்திருக்கும் இந்த விஷயம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com