தானியங்கி முறையில் கார் ஓட்டிய நபர் - இணையத்தில் வைரல்!

தானியங்கி முறையில் கார் ஓட்டிய நபர் - இணையத்தில் வைரல்!

ந்தியாவில் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் ADAS (Automatic Driver Assistant System) தொழில்நுட்பத்தை கார்களில் பயன்படுத்தித் தயாரிக்கிறார்கள். இந்த சிஸ்டம் டிரைவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி விபத்து ஏற்படுவதை பெருமளவுக்கு தானாகவே தடுக்கும் தொழில்நுட்பமாகும். 

ஆனால் இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் இருக்கும் கார்களை வைத்திருப்பவர்கள், இதை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு மிகவும் ஆபத்தான முறையில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஜோடி கார் ஓட்டியது இணையத்தில் வைரலானது. 

இதை தொடர்ந்து மற்றொரு நபர் அதேபோல் ஆபத்தான நிலையில் தன் ஓட்டுனர் இருக்கையில் இல்லாமல், அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டு வாகனம் ஓட்டும் வீடியோ வெளியானது. க்ரூஸ் கண்ட்ரோல் முறையை பயன்படுத்தி இந்த தொழில் நுட்பத்தில் கார்களை தானாக இயங்க வைக்க முடியும். ஆனால் டிரைவர் எப்பொழுது வேண்டுமானாலும் கண்ட்ரோலை தன்வசம் எடுத்துக் கொள்ளும் வகையில் ஓட்டுநர் இருக்கையிலேயே தயார் நிலையில் இருக்க வேண்டும். 

தற்போது வெளிவந்திருக்கும் வீடியோவில் ஓட்டுநர் இருக்கையிலிருந்து இடம் மாறி வேறு இருக்கையில் அமர்ந்து வாகனத்தை இயங்கச் செய்கிறார். டாஷ்போர்ட்டில் சாய்ந்து கொண்டும், தன் கால்களை பின் இருக்கை வரை நீட்டிக்கொண்டும் செல்போன் பயன்படுத்திக் கொண்டே மிகவும் ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார். 

என்னதான் அவர் சீட் பெல்ட் பொருத்தப்பட்ட நிலையில் பயணம் செய்தாலும், அவர் திரும்பி காரின் எதிர் திசையில் அமர்ந்திருப்பதால் அது முற்றிலும் பயனற்றதாக மாறிவிடுகிறது. காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்கள். 

இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த சிலர் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை, இது ஏதோ கிராபிக்ஸ் மூலமாக செய்திருக்கிறார்கள் என நினைத்தனர். ஆனாலும் சிலர் மகேந்திரா எக்ஸ்யூவி 700 காரில் இது சாத்தியம் தான் என்கின்றனர். ஏனெனில் இந்த காரில் உள்ள ஆட்டோமேட்டிக் பிரேக் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்டன்ட் ஆகியன ஒன்றிணைந்து வாகனம் தானாக ஓடுவதற்கு உதவும் என்கின்றனர். 

தானியங்கி முறையில் இயக்குவதற்கு முதலில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோலை ஆன் செய்ய வேண்டும். அதன் பின்னர் கார் எந்த வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்தில் ஆக்ஸிலரேட்டரின் உதவி இல்லாமலேயே செல்லும். எதிரே ஏதாவது வாகனம் வந்தாலும் அந்த வேகத்தை கணக்கீடு செய்து அதற்கேற்றவாறு வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். மேலும் குறுக்கே திடீரென்று தடை ஏற்படுத்துவது போல் ஏதாவது வந்தால், ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம் செயல்பட்டு வாகனத்தை நிறுத்திவிடும். வாகனம் எங்கேயாவது திரும்ப வேண்டும் என்றால் லேன் அசிஸ்டன்ட் மூலமாக சாலையில் எந்த புறம் திரும்ப வேண்டும் என நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சரியாக திரும்பிக் கொள்ளும். இதன் காரணமாகவே பலரும் காரின் சீட்டிலிருந்து நகர்ந்து வேறு இடத்தில் அமர்ந்து தைரியமாக இந்த காரை ஓட்டுகிறார்கள். 

இந்த சிஸ்டம் இந்தியாவில் தொடக்க நிலையில் மட்டுமே இருப்பதால், முழு தானியங்கி முறையாக இயங்கும் சிஸ்டமாக இதை எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி இருந்தும், இதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணராமல் பலர் இந்த முறையைப் பயன்படுத்தி வாகனத்தை இயக்கி வருகிறார்கள். 

ஒருவேளை உங்கள் வாகனத்தில் இந்த தொழில்நுட்பம் இருந்தால், யாரும் இதை முயற்சித்துப் பார்க்க வேண்டாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com