வாய்ஸ் சேவையில் ஜியோவை மிஞ்சிய எர்டெல் - நடப்பாண்டில் லாபம் 89 சதவீதம் உயர்வு!

வாய்ஸ் சேவையில் ஜியோவை மிஞ்சிய எர்டெல் - நடப்பாண்டில் லாபம் 89 சதவீதம் உயர்வு!

கடந்த மூன்று மாதங்களில் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் 89 சதவீதம் ஏறியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது எதிர்பார்த்ததை விட சற்று அதிகம் என்கிறார்கள். புதிய வாடிக்கையாளர்களின் வருகை, 4ஜி வரவுக்கு பின்னர் அதிகரித்திருக்கிறது.

இந்தியாவின் இரண்டாவது முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான எர்டெல் நிறுவனத்தில் லாபம் கடந்து மூன்று மாதங்களில் 89 சதவீதம் உயர்ந்து, 3006 கோடி கிடைத்திருக்கிறது. இது பங்குச் சந்தை நிபுணர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்களால் பெரிய அளவில் லாபத்தை பெற முடியாது என்றுதான் கணிப்புகள் தெரிவித்திருந்தன.

டிஜிட்டல் டிவி, ஏர்டெல் நிறுவனத்திற்கு புதிதாக வருவாயை தேடித் தருகிறது. அதே நேரத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் வருவாயில் பெரிய மாற்றங்கள் இல்லை.

சராசரியாக 193 ரூபாயை எர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளரிடமிருந்து பெறுகிறது. ரிலையன்ஸ் ஜியோவோடு ஒப்பிடும்போது இது அதிகம்தான். வாடிக்கையாளர்களின் டேட்டா பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது, ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சராசரியாக 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்திகிறார்கள். ரிலையன்ஸ் ஜியோவை பொறுத்தவரை, அதன் வாடிக்கையாளர்கள் 23 ஜிபி டேட்டாவை பயன்படுத்துகிறார்கள்.

தொலைபேசி அழைப்புகள் தற்போது வாட்ஸ்அப் வாய்ஸ் அழைப்புகளாக வரும் நிலையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப்பை தவிரத்துவிட்ட பழைய படி வாய்ஸ் சேவையை அதிகம் பயன்படுத்துகிறார்கள். வாய்ஸ் சேவையைப் பொறுத்தவரை ஜியோவை விட ஏர்டெல் முன்னிலையில் இருக்கிறது. சராசரி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்ற ஆண்டை விட 3.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. வீடுகளுக்கான பிராட்பேண்ட் இணைப்பு 7.2 சதவீதம் உயர்ந்திருக்கிறது. வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகல் நல்லதொரு இணைய இணைப்பு வேண்டு பலரும் ஏர்டெல் நிறுவனத்தையே நாடுகிறார்கள்.

ஜியோவின் வருகைக்குப் பின்னர் ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய நம்பர் ஒன் இடத்தை இழந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனாலும் இரண்டாவது இடத்தில் இருந்தபடி முதலிடத்திற்கு திரும்பவும் வருவதற்கு கடுமையாக போராடி வருகிறது. ஒரு சில விஷயங்களில் ஜியோவை விட சிறப்பான சேவைகள் தந்தாலும் ஏர்டெல் நிறுவனத்தால் பழைய நிலைக்கு வர இயலாத நிலை நீடிக்கிறது.

ஜியோ நிறுவனம் குறுகிய காலத்தில் 439 மில்லியன் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் நிறுவனம் 335 மில்லியன் வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் இரண்டு நிறுவனங்களுமே ஏற்றம் கண்டுவருகின்றன

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com