Ameca Humanoid Robot: இது மனிதனா? மெஷினா?

Ameca Humanoid Robot: இது மனிதனா? மெஷினா?

மனித உருவ ஹியூமனாய்டு ரோபோக்கள் எப்போதும் அறிவியல் புனைக்கதைகளில் பிரதானமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது வளர்ந்து வரும் மேம்பட்ட தொழில்நுட்பத்தால் அவை எதார்த்தமாக மாறி வருகிறது என்பதே உண்மை. அதற்கு எடுத்துக்காட்டாக Ameca என்னும் மனித உருவ ரோபோட்டை சொல்லலாம். 

Humanoid ரோபோ என்றால் என்ன?

Humanoid ரோபோ என்பது மனித உருவத்தில் இருக்கும் ரோபோ. கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே பெரும்பாலான செயல்களை இதனால் செய்ய முடியும். இந்த ரோபோக்கள் மனிதர்கள் பயன்படுத்தும் கருவிகள்  மற்றும் வாடிக்கையாளர் சேவையுடன் தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்பட்டவை. மேலும் ஆய்வு மற்றும் பராமரிப்புக்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களைப் போலவே கண்களும் சிலிக்கான் தோள்களும் இதில் பொருத்தப்பட்டிருந்தாலும், இது முழுக்க முழுக்க ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் பொருட்களினால் உருவாக்கப்பட்டது. 

Ameca ஹியூமனாய்டு ரோபோட் மனிதர்களைப் போலவே கை கால் மற்றும் கண் அசைவுகளை கொண்டிருக்கும். இதற்காக பிரத்தியேகமாக 'மெஸ்மர்' என்ற தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இதை உருவாக்கிய Engineered Arts என்ற நிறுவனம் கூறியுள்ளது. 

பல ஆங்கிலத் திரைப்படங்களில் ரோபோக்கள் மனிதர்களைப் போலவே மிகவும் தத்ரூபமாக இருப்பதை நாம் கண்டிருப்போம். என்னதான் தத்துரூபமாக இருந்தாலும் அவை அனைத்துமே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தான்.

இந்த ரோபோவையும் பல திரைப்படங்களில் காட்டப்பட்ட ரோபோக்களை போலவே தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்கள். 

இந்த ரோபோவை வாடிக்கையாளர் சேவை, தகவல் முனையங்கள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றுக்காக முதலில் பயன்படுத்த உள்ளார்கள். வாடிக்கையாளர் சேவை ரோபோவாக, இது இயற்கையாகவும் மனிதர்களைப் போலவும் தொடர்பு கொள்ளும். மேலும் கேட்கப்படும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் சிறந்த முறையில் பதில்களும் அளிக்கக்கூடியது. எதிர்காலத்தில் தனிப்பட்ட மனித வாழ்க்கையில் இது மிகப் பெரிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது. 

Ameca பற்றிய சுவாரசிய தகவல்கள்:

  1. இந்த ரோபோவால் மனிதர்களைப் போலவே தன்னுடைய கை கால்களை தனித்தனியாக அசைக்க முடியும். 

  2. இதன் கண்களில் மிகவும் மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி மனிதர்களுடைய முக அசைவுகளுக்கு ஏற்ப இதனால் செயல்பட முடியும். 

  3. இதனுடைய அசைவுகள் மற்ற ரோபோக்களிடமிருந்து மிகவும் மாறுபட்டதாக இருக்கிறது. மனிதர்களைப் போல தோள்பட்டை அசைவுகளைக் கூட இதனால் தத்ரூபமாக செய்ய முடிகிறது. 

சமீபத்தில் எலான் மஸ்க் கூட மனித உருவம் கொண்ட AI ரோபோட்டுகள் உலகை எந்த அளவுக்கு மாற்றப் போகிறது என்பதை குறித்து பேசி இருந்தார். 

Humanoid ரோபோ மக்களின் முன்னேற்றத்தின் அடுத்த கட்டம் தான் Ameca. தொழில்நுட்ப மேம்பாட்டால் Ameca போன்று மேலும்பல ரோபோக்கள் இதை விட முன்னேற்றம் கொண்டவையாக உருவாக்கப்படலாம்.

அது பல வகைகளில் மனிதர்களுக்கு பணிகளை செய்து கொடுக்கும். எனவே மனிதஉருவம் கொண்ட ரோபோக்களின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது எனலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com