கோடிக் கணக்கில் ஏலத்திற்கு வரும் ஆப்பிள் நிறுவன சாதனம்!
2007-ல் உருவாக்கப்பட்ட ஆப்பிள் சாதனம்;
2007-ல் ஆப்பிள் உருவாக்கிய சாதனம் ஒன்று சமீபத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் ஐபோன் 1st ஜெனரேஷன் என்ற மாடல், அதன் அசல் விலையை விட 100 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டது. இது, ஐபோன் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு அன்பாக்ஸ் செய்யப்பட்ட இந்த சாதனம் சமீபத்தில் நடந்த ஏலத்தில் $63356 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதை இந்திய மதிப்பில் சொல்ல வேண்டுமென்றால் சுமார் 52 லட்சமாகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முதல் தலைமுறை ஐபோன் மாடல் கடந்த 2007ஆம் ஆண்டில் அறிமுகமானது. இந்த மாடலில் இதுவரை சீல் உடைக்கப்படாத ஒரு சாதனம் சமீபத்தில் அதிக விலைக்கு ஏலம் போனதை தொடர்ந்து, மற்றொரு ஐபோன் சாதனமும் இதே போல் இருப்பதாகவும், இதையும் ஏலத்தில் விடப்போவதாகவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் விலை தற்போது 4875 அமெரிக்க டாலர்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த வினையாக 5363 டாலராகக் கோரப்பட்டுள்ளது. இந்த ஏலம் மார்ச் மாதம் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதுவரை ஏலம் தொடர்ந்து நடைபெறும். இதன் இறுதி விலையை எதிர்பார்த்து மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
1976-ல் உருவாக்கப்பட்ட ஆப்பிள் சாதனம்:
இதேபோல் 1976 இல் உருவாக்கப்பட்ட ஆப்பிள் 1 கம்ப்யூட்டரும் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதுவே ஆப்பிள் நிறுவனத்தின் முதல் கணினி தயாரிப்பாகும். அந்த காலகட்டத்தில் வெறும் 200 மாடல்கள் மட்டுமே இதில் தயாரிக்கப்பட்டது. இதுவரை நான்கு சுற்று ஏலம் முடிவடைந்த நிலையில் இதன் மதிப்பு $71,425 டாலராக உயர்ந்துள்ளது. அதாவது 59 லட்ச ரூபாய். இதன் அடுத்த ஏல விலை $78568 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1977-ல் உருவாக்கப்பட்ட ஆப்பிள் சாதனம்:
இதே ஏலத்தில், ஆப்பிள் நிறுவனத்தில் மற்றொரு சாதனமான Apple 1 Console விற்பனைக்கு வர இருக்கிறது. இதுவரை இந்த சாதனம் ஏலத்திற்கு வந்ததில்லை. 1977-ல் இந்தியானாவின் கொலம்பஸில் உள்ள ஒரு கணினி கடையில் முதன் முறையாக செயல் விளக்கம் அளிக்கப்பட்டு, விற்பனையாளர்களால் மட்டுமே வாங்கப்பட்ட சாதனம் இதுவாகும். தற்போது இதன் மதிப்பு 5 லட்சம் டாலர்கள் வரை செல்லலாம் எனக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூபாய் 4.71 கோடிக்கு விற்கப்படலாம்.
ஸ்டீவ் ஜாப்ஸ் ரெவல்யூசன்:
மேலும் இந்த இனத்திற்கு பிறகு, "ஸ்டீவ் ஜாப்ஸ் அண்ட் தி கம்ப்யூட்டர் ரெவல்யூசன்" என்ற தலைப்பில் சிறப்பு ஏலம் RR ஏல நிறுவனம் மூலமாக நிகழ்த்தப்பட உள்ளது. இதில் ஸ்டீவ் ஜாப்ஸ் பயன்படுத்திய கணினி, அவர் கையால் எழுதப்பட்ட நோட்ஸ், அவர் கையெழுத்திட்ட செக், ஸ்டீவ் ஜாப்ஸ் வணிக அட்டை, ஆப்பிள் லாசா ஆப்பிள் கம்ப்யூட்டரின் பங்கு சான்றிதழ், மேகிண்டோஷ் 128K மாடல் கம்ப்யூட்டர் போன்றவை ஏலத்தில் விடப்படும்.
பழைய ஆப்பிள் தயாரிப்புகள் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் சாதனங்கள் உங்களை மிகவும் கவரும் என்றால், இந்த RR ஏலத்தில் நீங்களும் இணையதளம் வாயிலாக இணையலாம்.