BharOS: இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் OS.

BharOS: இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் OS.

ந்தியாவில் IIT Madras முன்னணி கல்வி நிலையங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இதில் பயிலும் மாணவர்கள் ஒன்றாக இணைந்து, இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் OS உருவாக்கியுள்ளார்கள். ஆண்ட்ராய்டு & IOS-க்கு போட்டியாக வந்திருக்கும் இதன் முக்கிய அம்சங்களை இந்த பதிவில் காணலாம். 

ஆண்ட்ராய்டு மற்றும் IOS இவை இரண்டையும் தற்போது உலகில் இருக்கும் அனைத்து விதமான ஸ்மார்ட் ஃபோன்களிலும் நாம் காணலாம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் வைத்திருப்பவர்கள் IOS பயனர்களாகவும், இதர ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் ஆண்ட்ராய்டு OS பயனாளர்களாகவும் இருக்கிறார்கள். 

என்னதான் இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும், உற்பத்தித் துறையில் இந்தியா பின்தங்கியே இருக்கிறது. இந்தியாவுக்கென்று சொல்லும்படியாக எந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் இல்லை. இந்நிலையை மாற்ற எண்ணிய IIT Madras மாணவர்கள், இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன்  OS-ஐ உருவாக்கி இருக்கிறார்கள். இதற்கு BharOS என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'Jandk Operations Private limited, இந்த இயந்திரத்தை உருவாக்க பக்கபலமாக இருந்திருக்கிறது. அதிக பாதுகாப்பு அம்சம் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் OS, பயனர்கள் விரும்பும் வகையில் அதிக வசதிகளைக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார்கள். 

* ந்த OS-ல் பயனர்களுக்கு அதிகப்படியான சுதந்திரம், பயன்பாட்டு அனுபவம் மற்றும் அதிகாரம் வழங்கப்படும் என்றும், பயனர்களுக்கு அவர்களுக்கு விருப்பமான ஆப்களை தேர்வு செய்து வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும், பயனர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மீறல்கள் இதில் ஏற்பட வாய்ப்பில்லை. 

* தில் முன்கூட்டியே நிறுவப்பட்ட எந்த செயலிகளும் கிடையாது. எனவே OS தவிர அதிகப்படியான ஸ்டோரேஜ் இதில் இருக்கும். குறிப்பாக, தேவையில்லாத அல்லது பாதுகாப்பு குறைவாக இருக்கும் எந்த ஒரு செயலியையும், இதில் இன்ஸ்டால் செய்ய முடியாது. 

* PASS (Private App Store Service) என்றதொரு பிரத்தியேக செயலியும் இதில் இடம்பெறும்.  செயலிகளின் பாதுகாப்புத் தன்மையை இது முற்றிலுமாக பார்த்துக் கொள்ளும். ஏதேனும் செயலிகள் நம் தகவல்களைத் திருடுவது போல் தெரிந்தால், உடனடியாக அதை தூக்கிவிடும். 

* தாவது புதிய அப்டேட் வந்தால், அதுவே தானாக டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளும்.  மேலும் இதனால் பயனர்களின் தகவல் மற்றும் கருத்துரிமை முற்றிலுமாக பாதுகாக்கப்படும். 

* ந்த OS என்னதான் பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருந்தாலும் இதில் மேம்பாடு மேலும் தேவை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஏனென்றால் ஆண்ட்ராய்டு OS-ல் பேட்டரி, டிஸ்ப்ளே, செட்டிங், நோட்டிபிகேஷன், தனியுரிமை போன்றவற்றை நாமாகவே மாற்றிக் கொள்ளலாம். ஆனால் Bhar OS-ல் இந்த வசதிகள் இல்லை. தற்போது இது சோதனை ஓட்டத்தில் இருப்பதால் எதிர்காலத்தில் இதுபோன்ற வசதிகள் சேர்க்கப்படலாம். 

* பிரதமரின் Atma Nirbhar திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த OS, இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான மொபைல் பயனர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். இந்த முன்னெடுப்பு, இந்தியாவை ஸ்மார்ட்போன் உலகில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என நம்புவோம். 

இந்த OS பயன்பாட்டிற்கு வந்தால் நீங்கள் பயன் படுத்துவீர்களா மாட்டீர்களா?

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com