கூகுளை மிரட்ட வரும் ChatGPT

கூகுளை மிரட்ட வரும் ChatGPT

ற்போது தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய பேசுபொருளாக இருக்கும் ஒரு விஷயம் தான் இந்த ChatGPT. நவம்பர் மாதம் 2022ல், OpenAi என்ற நிறுவனம் மூலமாக வெளியிடப்பட்டது. செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட இந்த தொழில் நுட்பத்தை, கிட்டத்தட்ட கூகுளைப் போலவே ஒரு தேடுபொறியாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால் கூகுள் தேடுபொறிக்கும் இதற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், கூகுளில் ஒரு விஷயத்தை நீங்கள் தேடும்போது, அது பல வலைத் தளங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். அந்த வலைதளங்களில் நமக்குத் தேவையான விஷயங்களை ஒவ்வொன்றாக தேடிப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த Chatgpt-ல் நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி தேடும்போது, அதற்கான துல்லியமான பதிலை உடனடியாக அது கொடுத்து விடும். இதனால் நம்முடைய நேரம் வெகுவாக சேமிக்கப்படுவதோடு, நமக்கு தேவையான பதிலும், கணப்பொழுதில் கிடைத்து விடுகிறது.

மேலும், Chatgpt கொடுக்கும் பதிலில் உள்ள துல்லியத்தன்மை மற்றொரு சிறப்பான விஷயம். தற்போது இதனை பல துறைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், எழுத்துத் துறையில் இது மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Chatgpt வெளியிடப்பட்ட ஒரு வாரத்திலேயே, 10  லட்சத்திற்கும் மேலான பயன்பாட்டாளர்களை எட்டியது. இன்று, தினசரி 13 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டு சக்கை போடு போட்டு வருகிறது. தற்போது இதனை மக்களுடைய பயன்பாட்டிற்காக இலவசமாகவே கொடுத்துள்ளார்கள். எதிர்காலத்தில் இதற்குரிய ஒரு குறிப்பிட்ட சந்தா தொகையைக் கட்டி, நாம் பயன்படுத்துவது போல, மாற்றங்கள் கொண்டு வரலாம் என்று சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கூகுள் நிறுவனமும் இதற்கு எதிராக BARD என்றதொரு AI Chatbot வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது. அது மக்களுடைய பயன்பாட்டிற்கு வந்த பின்னரே, வெற்றி பெறப்போவது OpenAi நிறுவனமா அல்லது Microsoft நிறுவனமா என்பது தெரியவரும்.

மிரட்டப் போவது யார்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com