30 நாட்களுக்குள் உருவாக்கப்படும் வைரங்கள்! மெட்ராஸ் ஐஐடிக்கு 242 கோடி ஒதுக்கீடு.

30 நாட்களுக்குள் உருவாக்கப்படும் வைரங்கள்! மெட்ராஸ் ஐஐடிக்கு 242 கோடி ஒதுக்கீடு.

யற்கையாக 100 முதல் 300 கோடி ஆண்டுகளில் உருவாகும் வைரத்தை, வெறும் 15 முதல் 30 நாட்களுக்குள் ஆய்வகத்தில் உருவாக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

இங்கிலாந்து இளவரசர் ஹாரி 2019 ஆம் ஆண்டு தனது மனைவியை சந்திக்க வந்திருந்தார். அந்த சந்திப்பில் அவரது மனைவி அணிந்திருந்த கம்மல் மக்களிடையே மிகவும் பிரபலமானது. ஏனென்றால் அந்த காதுகளில் பொருத்தப்பட்டிருந்த வைரம் ஐந்தே நாட்களில் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இந்த செய்தி அந்நாட்டு ஊடகத்தில் காட்டுத் தீ போல்  பரவ, பெண்கள் அனைவரும் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்கள் பதித்த ஆபரணங்களை வாங்க ஆரம்பித்தார்கள். இது உலகம் முழுவதும் அறியப்பட்டு, இந்தியாவிலும் நடுத்தர மக்களிடையே ஆர்வத்தைக் கூட்டியுள்ளது. 

இந்தியாவில் வைரத்திற்கு மிகவும் பெயர் போன சூரத்தில், இயற்கை வைரத்தின் அதே மூலக்கூறுகளைக் கொண்ட வைரங்கள், 15 முதல் 30 நாட்களில் ஆய்வுக்கூடத்தில் தயார் செய்யப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து அதிக அழுத்தம் மற்றும் வெப்பம் உருவாக்கும் HPHT வெளிநாட்டு தொழில்நுட்ப சாதனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்த HPHT சாதனங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அதிக செலவுகள் ஆகும் என்பதால், இந்தியாவில் இதை தயார் செய்வதற்கு சென்னை ஐஐடியின் வர்த்தகத்துறை மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. 

இதைத்தொடர்ந்து ஆய்வக வைரங்களை முழுமையாக இந்தியாவிலேயே உருவாக்க, அடுத்தகட்ட ஆராய்ச்சியை சென்னை ஐஐடியில் மேற்கொள்ள, மத்திய அரசுத் தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வு உண்மையிலேயே பல சவால்கள் நிறைந்தது. "இதை எங்கள் இயக்குனர் காம கோட்டியின் வழிகாட்டுதலில், சிறப்பாக செயல்படுத்துவோம்" என, இந்த ஆய்வின் முதன்மை ஆராய்ச்சியாளர் ராமச்சந்திர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளமை நிறைந்த நாடுகளே, இயற்கையாகக் கிடைக்கும் வைரமானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்து எனக்கூறி, ஆய்வகத்தில் உருவாக்கப்படும் வைரத்தையே அதிகம் விரும்புகிறார்கள். ஏனென்றால், இயற்கையாக கிடைக்கும் வைரங்களை பூமியிலிருந்து எடுக்க, 350 டன் பாறைகளையும் மணலையும் வெட்டி எடுக்க வேண்டும். சில சமயம் எவ்வளவு தோண்டினாலும் வைரங்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது. இதில் பல பேருடைய உழைப்பு சுற்றுச்சூழல் பாதிப்பு பட்டத்தை தீட்டும் செலவு, செய்கூலி, சேதாரம் மற்றும் மார்க்கெட்டிங் என வைரத்தின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது. 

இதுபோன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடவே, லேப் மேட் (lab made) வைரங்கள் உருவாக்கப்பட்டன. இந்த ஆய்வக வைரத்தை ஆபரணங்கள் செய்ய மட்டுமின்றி, பல மின் சாதனங்களிலும் தொழிற்சாலை களிலும் கூட பயன்படுத்த முடியும். 

Lab Grown Diamond எனும் ஆய்வக வைரங்கள், இயற்கை வைரத்திற்கு நிகரான, எல்லா வேதியல் கூறுகளையும், பண்புகளையும் கொண்டிருக்கும். அதேசமயம் இயற்கை வைரத்தை விட விலை மிகவும் குறைந்ததாக இருக்கும். இந்த வைரத்தை சென்னை ஐஐடியில் உருவாக்க ரூபாய் 242 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com