இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா?

இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா?

மீபத்தில் தான் ட்விட்டர் ப்ளூ வெர்ஷன் பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து மெட்டா நிறுவனமும் இதே போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பணம் செலுத்தி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெரிஃபைடு டிக் பெற்றுக் கொள்ளலாம். 

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா அவர்களின் செயலிகளில் வெரிஃபைட் பேட்ச் பெறுவதற்கான கட்டண விவரங்களை அறிவித்துள்ளது. இணையதளப் பயன்பாட்டாளர்கள் மாதத்திற்கு $11.99 டாலர்களும், IOS பயணங்கள் மாதம் $14.99 டாலர்களும் சந்தா கட்ட வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளது. 

பயனர்கள் தாங்கள் வைத்திருக்கும் அரசாங்க ஐடி மூலமாக மிக எளிமையாக ஐடி வெரிஃபிகேஷன் செய்து கொள்ளலாம். இதை முதன் முதலில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. சுயவிபரம் சரிபார்ப்பு, facebook மற்றும் இன்ஸ்டாகிராம் போலி ஐடி ஒழிப்பு மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்களை சரிப்படுத்த, இதன் சந்தாதாரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப் படுகிறது. 

பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெரிஃபிகேஷன் வாங்கி விடலாம் என நினைக்க வேண்டாம். இதற்கும் அவர்கள் சில நிபந்தனைகள் வைத்திருக்கிறார்கள். 

* நீங்கள் தொடர்ச்சியாக பதிவுகள் போடும் நபராக இருக்க வேண்டும். உங்கள் பதிவின் வரலாற்றையும் கணக்கீடு செய்து தான் உங்களுக்கு வெரிஃபிகேஷன் வழங்கப்படும். 

* வெரிஃபிகேஷன் வாங்க விரும்பும் நபர், 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 

* தற்போது தொழில் நிறுவனங்கள் இந்த மெட்டா வெரிஃபிகேஷன் வாங்க முடியாது. 

இதைப் பற்றி மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். "என்னுடைய மெட்டா வெரிஃபைட் சந்தாவை இந்த வாரம் நாங்கள் வெளியிட தொடங்குகிறோம். இது போலி கணக்குகளை நீக்கவும், பயனர்கள் அரசாங்க ஐடி மூலமாக தங்களை வெரிஃபைடு செய்து, நீல நிற டிக் பெறவும் உதவியாக இருக்கும். எங்களின் சேவைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை இந்த புதிய அம்சம் அதிகரிக்கும் என நம்புகிறோம். இது தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டுமே வெளியிடப்படுகிறது. பின்வரும் நாட்களில் இது மேலும் பல நாடுகளுக்கு வெளியிடப்படும்." 

மெட்டா சந்தாதாரர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும். தொடர்ந்து அவர்களுடைய அறிவிப்புகளில் முன்னுரிமையும் வழங்கப்படும். குறிப்பாக, மாதம் 100 ஸ்டார் ஸ்போக்கன் எனப்படும் மெட்டா டிஜிட்டல் கரன்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பில் மெட்டாவின் சேவை குறித்து அவர்கள் கூடுதல் தகவல் எதையும் வெளியிடவில்லை என்றாலும், ட்விட்டர் போலவே சந்தாவை அறிமுகம் செய்த செய்தி, மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. ஒரே சந்தாவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு வெரிஃபிகேஷன் வாங்கிக் கொள்ளலாம் என்ற அம்சம் மக்கள் விரும்பத்தக்க வகையில்தான் உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com