இந்தியாவில் Twitter Blue கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் Twitter Blue கட்டணம் எவ்வளவு தெரியுமா?

றுதியாக ட்விட்டரின் அடுத்த பதிப்பான ட்விட்டர் ப்ளூ (Twitter Blue) இந்தியாவுக்கும் வந்துவிட்டது. உண்மை என்னவென்றால், இந்த பதிப்பு கடந்த ஆண்டே வர வேண்டியது. இடையில் எலான் மஸ்க் உள்ளே புகுந்து ட்விட்டரையே தன்வசப்படுத்தியதுதான் இந்தத் தாமதத்திற்குக் காரணம். 

 "சரி, இந்த 'ட்விட்டர் ப்ளூ' வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது?" என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. 

இதன் சிறப்பு என்னவென்றால், ட்விட்டரின் சாதாரண பதிப்பில் வரும் விளம்பரங்களை விட, இதில் குறைவாகவே வரும். நீங்கள் பதிவு செய்த ட்வீட்டை 30 நிமிடத்திற்குள் 5 முறை மாற்றிக் கொள்ளலாம். குறிப்பாக இதன் சந்தாதாரர்கள் ஃபுல் ஹெச்டி (Full HD)-ல் காணொளி பதிவேற்றம் செய்யலாம். முன்பெல்லாம், Verified Badge எனப்படும் பெயருக்கு அருகில் வரும் ப்ளூ டிக் அனைவருக்கும் கொடுக்க மாட்டார்கள். மிகவும் பிரபலமாக இருக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். ஆனால் தற்போது இந்த ட்விட்டர் ப்ளூவில், நீங்கள் சந்தாதாரராக மாறினாலே உங்களுக்கு Verified Badge கொடுக்கப்படும். இதுபோன்று பல சிறப்பம்சங்களை இது கொண்டுள்ளது. 

இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயன்பாட்டாளர் களுக்கு மாதம் 900 ரூபாய் என்ற கட்டணத்திலும், இணையதளப் பயன்பாட்டாளர்களுக்கு மாதம் 650 அல்லது வருடம் 6800 என்ற வீதத்தில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இதை வைத்துப் பார்க்கும்போது, செயலி வடிவில் பயன்படுத்துவதை விட, இணையதளத்தில் பயன் படுத்தினால் கட்டணம் குறைவாக இருப்பதைக் காண முடிகிறது. செயலி வடிவில் இருக்கும் பதிப்பிற்கு ட்விட்டர் நிறுவனமானது, Google Play-வில் கட்டணம் செலுத்த வேண்டும். இதுவே இந்த விலை வித்தியாசத்திற்கு முக்கிய காரணமாகும். 

சந்தாதாரராக எப்படி மாறுவது? 

ண்ட்ராய்டு, IOS மற்றும் இணையதள  பயன் பாட்டாளர்கள் ஏற்கனவே இருக்கும் ட்விட்டர் கணக்கு மூலமாகவே, இந்த புதிய ட்விட்டர் ப்ளூ பதிப்புக்கு சந்தாதாரராக மாறலாம். இதற்கென்று தனிப்பட்ட செயலி எதுவும் நீங்கள் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை. இதன் பயன்பாட்டாளர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com