வாட்ஸ் அப்பில் எடிட் ஆப்ஷன்; அடுத்து ரெடிமேட் ஸ்டிக்கர் தயார்!

வாட்ஸ் அப்பில் எடிட் ஆப்ஷன்; அடுத்து ரெடிமேட் ஸ்டிக்கர் தயார்!

அவசர அவசரமாக வாட்ஸ் அப்பில் தவறாக செய்தி அனுப்பிவிட்டு, அதை திரும்பப் பெறவும் முடியாமல் தவிப்பரா? கவலையே வேண்டாம். மார்க் நம்மைப் போன்றவர்களுக்காகவே எடிட் ஆப்ஷனை கொண்டு வருகிறார்.

வாட்ஸ் அப்பில் அனுப்பிய செய்தியை இனி எடிட் செய்ய முடியும். அனுப்பி 15 நிமிடங்கள் வரை என்ன வேண்டுமானாலும் எடிட் செய்து கொள்ள முடியும். பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் எடிட் செய்வதை அனுமதிக்கின்றன.

வாட்ஸ்அப் போட்டியாளர்களான டெலிகிராம், சிக்னல் போன்றவற்றில் ஏற்கனவே எடிட் ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. டிவிட்டர் முன்பு எடிட் ஆப்ஷன் தரவில்லை. தற்போது டிவிட்டரிலும் டெக்ஸ்ட்டை எடிட் செய்து அப்டேட் செய்ய முடியும்.

பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்ய முடியும். மீட்டிங் போன்ற விஷயங்களுக்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய மைக்ரோசாப்ட் டீம் செயலியில் கூட 3எடிட் ஆப்ஷன் தரப்பட்டவில்லை. பின்னர் ஏராளமான மக்களின் வேண்டுகோளுக்கிணங்க எடிட் ஆப்ஷன் கொண்டு வரப்பட்டது.

வாட்ஸ் அப் நிறுவனமும் எடிட் ஆப்ஷன் தரப்போவதால் இனி அவசரப்பட்டு மேசெஜ் அனுப்பிவிட்டு மன உளைச்சலோடு இருக்க வேண்டியதில்லை. சிலர் வாழ்த்துச் செய்திகளில் கூட அவசரப்பட்டு ஸ்பெல்லிங் மிஸ்டேக் அல்லது வேறு ஏதாவது வார்த்தைகளை பயன்படுத்திவிடுகிறார்கள். சில நேரங்களில் தவறான எமோடிகனை பயன்படுத்துவதால் விருப்பத்தகாத விஷயங்களும் நடந்துவிடுகின்றன.

வாட்ஸ் அப்பை வைத்துள்ள மெட்டா நிறுவனத்தின் செயல் அதிகாரியான மார்க், நேற்று இது குறித்து பேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார். அனுப்பப்பட்ட 15 நிமிடத்திற்குள் டெக்ஸ்ட்டை மாற்ற முடியும் என்றும் அடுத்து வரும் சில வாரங்களில் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய வசதியை ஏற்படுததி தரமுடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

முன்பு அனுப்பிய செய்தியை டெலிட் செய்ய வேண்டியிருந்தது அல்லது முந்தைய செய்தியில் ஏதேனும் தவறு இருந்தால் அதைக்குறிப்பிட்டு திருத்தி எழுதி அனுப்ப வேண்டியிருந்தது. இனி அதையெல்லாம் செய்யத் தேவையில்லை. டெக்ஸ்ட்டை எடிட் செய்துவிடலாம்.

எப்படி எடிட் செய்வது? ஏற்கனவே அனுப்பிய டெக்ஸ்ட்டை நீண்ட நேரம் அழுத்தினால் எடிட் என்னும் ஆப்ஷன் கிடைக்கும். அதை கிளிக் செய்து எடிட் செய்துவிடலாம். நீங்கள் எடிட் செய்து அப்டேட் செய்துவிட்ட பின்னர் மெசேஜ், edited என்று காண்பிக்கும். எடிட் ஹிஸ்டரியை பார்க்க முடியாது.

ஒருவேளை 15 நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்டவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டால் நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஒருவேளை ரகசியமாக சிலரிடம் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் சாட் லாக் என்னும் புதிய ஆப்ஷனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சாட் லாக், பாஸ்வேர்டு ஆப்ஷனை தருகிறது. சாட் லாக்கில் உள்ள எண்ணோடு உரையாடல் நடத்தும்போது பாஸ்வேர்டு தரவேண்டும். புதிதாக டெக்ஸ்ட வரும்போது சம்பந்தப்பட்ட போல்டரில் சென்று பாஸ்வேர்டு கொடுத்து பார்க்க வேண்டியிருக்கும்.

வாட்ஸ்அப் இன்னொரு முக்கியமான ஆப்ஷனையும் இவ்வாண்டு இறுதிக்குள் கொண்டு வர இருக்கிறது. நம்முடைய போட்டோவை ஸ்டிக்கராக மாற்றிக்கொள்ளும் ஆப்ஷன்தான். இது மட்டும் அறிமுகமாகிவிட்டால், நம்முடைய போட்டாவை வைத்து நிறைய பேர் ஸ்டிக்கர் தயார் செய்து டிரோல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com