மெட்டாவின் சக்தி வாய்ந்த AI இணையத்தில் கசிந்தது எப்படி?

மெட்டாவின் சக்தி வாய்ந்த AI இணையத்தில் கசிந்தது எப்படி?

மெட்டாவின் LLaMA என்ற AI மாடல், ஆராய்ச்சியாளர் களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இது அறிவிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே இணையத்தில் கசிந்துள்ளது. சிலர் இந்தத் தொழில்நுட்பம் தவறான விஷயங்களுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று கவலைப்படுகிறார்கள். 

இரண்டு வாரங்களுக்கு முன்பு மெட்டா அதன் சமீபத்திய AI மொழி மாதிரியை அறிவித்திருந்தது. LLaMAவை ChatGPT போன்று அனைவராலும் அணுக முடியாது என்றாலும், இது மெட்டா நிறுவனத்தின் AI மொழித் தொழில்நுட்பத்தின் எழுச்சிக்கு, மிகப்பெரிய பங்களிப்பாகும். இது நாம் நமது கணினிகளுடன் தொடர்பு கொள்வதற்கான புதிய வழிமுறையை ஏற்படுத்தும்.  

மெட்டா, LLaMAவை பொதுவாக அனைவரும் பயன் படுத்தும் வகையில் உருவாக்கவில்லை. ஆனால் AI சமூகத்தில் உள்ள எவரும் அணுகக் கூடியத் தொகுப்பாக வெளியிட முடிவு செய்திருந்தது. இதை அணுகுவதற்கான கோரிக்கைகளை மெட்டா களமிறக்கத் தொடங்கிய ஒரு வாரத்தில், இந்த மாடல் இணையத்தில் கசிந்தது. இதை அனைவரும் கணினியில் தரவிறக்கம் செய்யும்படி, 4Chan என்ற டொரண்ட் பக்கத்தில் வெளியிடப்பட்டது. பின்னர் பல்வேறு AI சமூகங்கள் முழுவதும் பரவி விவாதத்தை தூண்டியுள்ளது. 

இது மெட்டா நிறுவனத்திற்கு மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தப் போகிறது எனவும், இந்த அளவுக்கு கவனக்குறைவாக செயல்படுவார்களா? என அந்நிறுவனத்தை பலரும் சாடி வருகிறார்கள். மேலும் சிலர், இவ்வாறு திருடப்பட்டு வெளியிடப்படுவதால், இதன் பாதுகாப்பு அம்சம் பற்றி நிறுவனங்கள் சிந்திக்கும் என நேர்மறையாகக் கூறி வருகிறார்கள். 

சில வல்லுனர்கள், இதைப் பற்றி பெரிதாக யாரும் கவலைப்பட வேண்டாம். LLaMA  இயங்குவதற்கான வன்பொருளை சாதாரண மக்கள் யாரும் சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை. எனவே இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது மக்களுக்கு கடினமான விஷயம் எனக் கூறுகிறார்கள். 

AI ஆராய்ச்சியின் எதிர்காலம் என்ன? 

Open மற்றும் Closed சோர்ஸ் முறையின் போராட்டம் தான் இந்த LLaMA தொழில்நுட்பத்தின் கசிவாகும். AI தொழில்நுட்பத்தின் தேவை சார்ந்த விவாதத்தை வரையறுப்பதற்கு மிகைப்படுத்துதல் தேவைப்படுகிறது. இந்த இரண்டு துருவங்களுக்கு மத்தியில் தான் அனைத்து ஆராய்ச்சியாளர்களும் போராடி வருகிறார்கள். ஆனால் அடிப்படையில்  AI ஆராய்ச்சி மாடல்களுக்கு அதிக அணுகல் வேண்டும் என சிலரும், வேண்டாம் என சிலரும் வாதிடுகிறார்கள். இந்தத் தொழில்நுட்பத்தை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும். 

பெரும்பாலும் நாம் அனைவருமே இந்த AI தொழில்நுட்பத்தின் தொடக்க நிலையில்தான் தற்போது இருந்து வருகிறோம். கூகுளுக்கு மாற்றாக வந்திருக்கும் ChatGPT, நீங்கள் என்ன உள்ளீடு கொடுக்கிறீர்களோ அதற்கு ஏற்றவாறு படங்களை உருவாக்கும் Dall-E தொழில்நுட்பங்களுக்கும், LLaMA கசிவு போல் ஏதாவது நடக்கலாம். 

ஒன்றுமே தெரியாத விஷயத்தில் தவறு செய்து தானே நம் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறுதான் AI தொழில்நுட்பமும். புதிய தொழில்நுட்பங்களில் ஏற்படும் தவறுகளை மிகப்படுத்தாமல், அதை சரியாகப் பயன்படுத்தி கொள்வது அவசியமான ஒன்றாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com