இந்த ஆப் உங்க போன்ல இருந்தா, டிராபிக் போலீஸிடம் மாட்டாமல் தப்பிக்கலாம்.

இந்த ஆப் உங்க போன்ல இருந்தா, டிராபிக் போலீஸிடம் மாட்டாமல் தப்பிக்கலாம்.

வாகன ஓட்டிகளுக்கு தற்போது மிகப்பெரிய சவாலாக இருப்பது, சாலை விதிமுறைகளைத் தெரியாமல் மீறி விட்டால் போக்குவரத்துத் துறையிலிருந்து வரும் அபராத சலான்களும், அதற்காக நீதிமன்றத்திற்கு அலைவதும் தான். இதுபோன்ற பிரச்னைகளில் இனி மாட்டாமல் இருக்க, செயலிகள் இருக்கின்றன என்று சொன்னால் நம்புவீர்களா? 

தமிழகத்தில் எல்லா நகரங்களிலும் போக்குவரத்து விதிகள் மிகவும் கடுமையாக இருக்கிறது. இந்நிலையில் நீங்கள் அவற்றை மீறுவது உங்களுக்கு மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தலாம். அபராதத் தொகையும் தற்போது பன்மடங்கு உயர்ந்து விட்டது. ஏன், சிறை செல்லும் அபாயமும் இருக்கிறது! என்னதான் போக்குவரத்து போலீசாரிடம் பேசி சரி செய்து கொள்ளலாம் என நினைத்தாலும், அபராதச் சலான் வீட்டை அடையும்போது குழப்பம் அடைவோம். 

தற்போது சிசிடிவி கேமராக்கள் அதிக இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது, யாரும் இல்லாத இடத்தில் தவறு செய்தாலும் ஏதோ ஒரு கேமராவில் சிக்கி விடுகிறோம் என்பது தான் உண்மை. மேலும், பெரும்பாலான இடங்களில் ஸ்பீடு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இணைக்கப்பட்ட வேகத்தை மீறி வாகனம் ஓட்டினால் தானாகவே படம் பிடிக்கப்பட்டு, அபராதம் போட்டுவிடும். இனி யாரும் போக்குவரத்து விதிகளை மீறி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற நிலைதான். 

செய்த தவறுக்கு பணம் செலுத்துவது ஒரு புறம் இருக்க, சில தவறுகளுக்கு நீதிமன்றம் வரை அலைய வேண்டும் என்பதை நினைத்துப் பார்த்தால், மிகவும் சிக்கலான நடைமுறைதான். இது போன்ற பிரச்சினைகள் எனக்கு வேண்டாம் என நினைப்பவர்கள் தற்போது நான் கூறப்போகும் இரண்டு செயலிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இந்த செயலிகள் உங்களுக்கு எங்கே கேமராக்கள், சிவப்பு விளக்குகள், டிவைடர்கள், போக்குவரத்து நெரிசல் மற்றும் வேகக்கட்டுப்பாடுகள் உள்ளன என்ற தகவல்களை உடனுக்குடன் வழங்கும். 

  1. Waze Navigation and Live Traffic: இது ஒரு இரட்டை செயல்பாடு கொண்ட செயலியாகும். இதை வரைபடம் பார்க்கவும் மற்றும் வேகத்தைக் கண்டறியவும் பயன்படுத்தலாம். சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பீடு கேமரா வருவதற்கு முன்பே அதற்கான அறிவிப்பு உடனடியாக இதில் கிடைத்துவிடும். மேலும் சாலை தடைகள் போக்குவரத்து சார்ந்த தகவல்கள் அனைத்தும் இந்த ஆப் மூலமாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். 

  2. Radorbot Speed Camera Detector: நாம் செல்லும் வழித்தடத்தில் உள்ள வேகக் கேமராக்கள் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும். இதிலும் சாலை தடுப்புகள் மற்றும் போக்குவரத்து சார்ந்த தகவல்களை நீங்கள் உடனுக்குடன் பெறலாம். எந்த இடத்தில் எவ்வளவு வேக வரம்பு இருக்க வேண்டும் என்பதையும் இந்த செயலி உங்களுக்கு காண்பித்து விடும். 

இந்த இரண்டு செயலிகளையுமே ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பயன்படுத்தலாம். சாலை விதிமுறைகளைப் பின்பற்றி செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை. சாலை விதிகளை பின்பற்றுதல், உங்களை மட்டுமல்ல, எதிரே வரும் நபரையும் காக்கக்கூடும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். செயலிகளைப் பதிவிறக்கம் செய்து கொண்டு, விதிமுறைகளைக் கண்டுபிடித்து, விபரீதங்களையும் அபராதங்களையும் அலைச்சலையும் தவிர்ப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com