'குறைதீர் தீர்ப்பாயக் குழு’ 
 ஏன்? எதற்கு?

'குறைதீர் தீர்ப்பாயக் குழு’ ஏன்? எதற்கு?

க்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது இந்தியாவில் வெறும் 47 சதவீதம் மக்கள் மட்டுமே இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்றாலும், இதில் பெரும்பாலானவர்கள் தனது நேரத்தை சோசியல் மீடியா தளங்களிலேயே செலவிடுகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 

என்னதான் சோசியல் மீடியா அதிகம் பயன் படுத்தினாலும், அதைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் என்று சிலது இருக்குமல்லவா? அதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம் வாருங்கள். 

நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்கினாலும் அல்லது ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழில் செய்து கொண்டிருந்தாலும், சோசியல் மீடியா மார்க்கெட்டிங் யுக்தி என்பது அதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதைச் சிறப்பாக செய்ய மிகவும் பிரபலமான சமூக ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

சமீபத்திய கணக்கெடுப்பின்படி 47% மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான மிகப்பெரிய காரணம் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதற்காக எனக் கூறியுள்ளார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. நமக்கு தெரிந்தவர்கள் போடும் பதிவுகளுக்கு கருத்து தெரிவித்தல், லைக் போடுதல் மற்றும் அவர்களுடைய தினசரி புதுப்பிப்புகள் சார்ந்த விஷயங்களில் மக்கள் அதிகம் ஈர்க்கப் படுகிறார்கள். 

இரண்டாவது முக்கிய காரணம் என்னவென்றால், 36% மக்கள் ஓய்வு நேரத்தில் தங்களுடைய சலிப்பை சமாளித்துக் கொள்ள, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகிறார்களாம். 34% மக்கள் புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள, அதிக நேரத்தை சோசியல் மீடியாவில் செலவிடுகிறார்கள். 

அடுத்ததாக 26% மக்கள் இணையத்தில் ஏதாவது பொருட்களை வாங்குவதற்காக சோசியல் மீடியாக்களைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் 28% அப்படி இந்த பதிவில் என்னதான் சொல்கிறார்கள் என்பதை அறியவும், 27% தனக்கு ஏதாவது உந்துதலை ஏற்படுத்திக் கொள்ளவும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்களாம். 

சமூக ஊடகங்களில் வீடியோ கன்டென்ட் பார்ப்பதற்கு சிறப்பாக இருப்பதால், அதை மக்கள் அதிகம் விரும்புவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. எதையுமே செய்யவில்லை என்றாலும் சும்மாவாவது இணையத்தில் ஏதாவது Scroll செய்து பார்ப்பது மக்களுக்கு அதிகம் பிடித்துள்ளது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

அதேசமயம், சோசியல் மீடியாக்கள் மீது அதிகப்படியான புகார்களும் எழுந்து வருகின்றன. இதை நீதிமன்றம் வரை கொண்டு சென்று தீர்வு பெறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதால், மத்திய அரசு, பயனர்கள் தங்கள் சமூக ஊடகங்கள் சார்ந்த புகார்களைப் பதிவு செய்ய, gac.gov.in என்னும் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. 

சமூக ஊடகப் புகார்களுக்கு விரைவில் தீர்வு காண "குறைதீர் தீர்ப்பாயக் குழு" அமைக்க மத்திய அரசு ஜனவரி மாதம் அறிவுறுத்தியிருந்தது. இக்குழுவில் அரசால் நியமிக்கப்பட்ட மூன்று நபர்கள் இருப்பார்கள். இவர்கள் இந்தியாவில் சமூக ஊடகங்கள் நம்பகத்தன்மையுடனும் பாதுகாப்புடன் இருக்கிறதா என்று தொடர்ந்து கவனித்து, சமூக வலைதளங்கள் மீது மக்கள் கொடுக்கும் புகார்களை விசாரிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com