ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் இறங்கியது டாடா குழுமம்!

ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் இறங்கியது டாடா குழுமம்!

இந்தியாவின் பெருமை மிக்க டாடா குழுமம், ஐபோன் தயாரிப்பாளர்களின் எலைட் கிளப்பில் இணைந்துள்ளது, ஏனெனில் அது பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள வசதியான இடமொன்றில் பிரீமியம் ஆப்பிள் கேஜெட்டைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது என்று மே 16 அன்று வெளியான அறிக்கையொன்று தெரிவிக்கிறது.

பெங்களூருவின் புறநகரில் அமைந்துள்ள நரசபுராவில் உள்ள தைவான் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான விஸ்ட்ரான் அமைந்துள்ளது. இந்த விஸ்ட்ரான் தொழிற்சாலையில் இருந்து தான் ஐபோன் தயாரிப்பை டாடா நிறுவனம் தொடங்கியுள்ளது என்று ஊடகங்கச் செய்திகள் தெரிவிக்கின்றன. பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி, விஸ்ட்ரான் நிறுவனத்திடம் இருந்து இந்த தொழிற்சாலையை வாங்க டாடா முயன்றது.

டாடா நிறுவனத்தார் ஏற்கனவே விஸ்ட்ரான் அளித்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளதாகவும், அவர்களின் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் செயல்பாடுகள், மனிதவளம் மற்றும் நிர்வாகத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர் எனவும் கூறப்பட்டு வரும் நிலையில்; அதை உறுதிப்படுத்தும் விதமாக “ தயாரிப்பு மட்டுமல்ல அவர்கள் செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகளிலும் கூட அங்கேயே பயிற்சி பெறவும் தொடங்கி இருக்கிறார்கள்," - என்று டாடா குழுமத்தின் உள் வட்டாரச் செய்திகள் கூறுகின்றன.

விஸ்ட்ரான் தனது "ஆப்பிள் தயாரிப்பு செயல்பாடுகளில் இருந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது" என்றும், இந்தியாவில் ஆப்பிள் அல்லாத பிற தயாரிப்புகளில் கவனம் செலுத்தும் என்றும் சில ஆதாரப் பூர்வமான செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், டாடா குழுமத்தை நிர்வகிக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என் சந்திரசேகரனுடன் தனது இந்திய வருகையின் போது ஒரு சந்திப்பை நடத்திய சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது.

சீனாவைத் தாண்டி தன் உற்பத்தி திறன்களை பல்வகைப்படுத்துவதற்காக, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை ஒரு முக்கிய உற்பத்தி மையமாக மாற்ற முயன்று கொண்டிருக்கும் தருணத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம், இதுவரை, தனது ஐபோன் யூனிட்களின் உள்ளூர் உற்பத்திக்காக ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் போன்ற ஒப்பந்த உற்பத்தியாளர்களை நம்பியிருந்தது.

தொழில்துறை ஆதாரங்கள் அளிக்கும் மதிப்பீடுகளின்படி பார்த்தால், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் $5 பில்லியன் முதல் $5.5 பில்லியன் வரையிலான ஐபோன் ஏற்றுமதிகளை ஆப்பிள் நிறுவனம் செய்துள்ளது, இது நாட்டின் மொபைல் போன் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதியைக் கொண்டுள்ளது.

கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் அறிக்கையின்படி, 2021 ல் சாத்தியமான 12 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, 2022ல் 'மேட் இன் இந்தியா' ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகளில் 25 சதவீதத்தை குபெர்டினோ தொழில்நுட்ப நிறுவனமானது கைப்பற்றியது.

ஆப்பிளின் கூட்டாளி நிறுவனங்களான ஃபாக்ஸ்கான் மற்றும் விஸ்ட்ரான் 2022 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டில் முதல் 10 இடங்களில் வேகமாக வளர்ந்து வரும் உற்பத்தியாளர்களாக இருந்தன, இது ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அதிகரித்த ஏற்றுமதியால் தூண்டப்பட்ட நிகழ்வு என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

ஆப்பிள் தற்போது இந்தியாவின் பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் (ரூ.30,000 க்கு மேல்) முன்னணியில் உள்ளது மற்றும் 2022 ஆம் ஆண்டின் Q4 இல் ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில் நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com