சரியான போட்டி! Smart Tag - ஆப்பிளுக்குப் போட்டியாக வரும் புதிய Samsung சாதனம்.

சரியான போட்டி!
Smart Tag - ஆப்பிளுக்குப் போட்டியாக வரும் புதிய Samsung சாதனம்.

சாம்சங் நிறுவனமானது தனது தயாரிப்புகளின் வரிசையில் ஆப்பிள் நிறுவனத்திற்குப் போட்டியாக ஒரு சாதனத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புதிய சாதனத்தை சந்தைப்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளது. 

இந்த புதிய சாதனத்தின் பெயர் சாம்சங் ஸ்மார்ட் டேக். இதே போல ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்தின் ஏர் டேக் சந்தையில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இது உலக அளவில் GPS டிராக்டர் கருவிகளாக பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தங்களுடைய தேவைக்கு ஏற்றார் போல இந்த சாதனத்தை பயன்படுத்தி வருகிறார்கள். 

உலகிலேயே முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றுதான் சாம்சங். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கேலக்ஸி ஸ்மார்ட் டேக் என்ற பெயரில் தனது முதல் ஆப்ஜெக்ட் டிராக்டர் சாதனத்தை 2021 ஆம் ஆண்டில் வெளியிட்டது. இந்த சாதனத்தோடு ஒப்பிடுகையில் தற்போது வரவிருக்கும் இரண்டாம் தலைமுறை சாம்சங் டாக் பல மேம்படுத்தல்களோடு வெளிவரும் என எதிர்பார்க்கலாம். 

இந்த புதிய ஸ்மார்ட் டே இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட வயர்லெஸ் ரேஞ்ச், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் கொண்ட அம்சங்களுடன் வெளிவர உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டேக்குடன் பல புதிய சாதனங்களை சாம்சங் நிறுவனம் வெளியிடப்போகிறது. இதில், சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6, சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 மேலும் அடுத்த தலைமுறை ஃபோல்டபுள் ஸ்மார்ட்போன் (Fordable  Smartphone) போன்றவற்றை எதிர்பார்க்கலாம். 

ஸ்மார்ட் டேகை NFC டேக் என்றும் கூறுவார்கள். நாம் தினமும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், கீ செயின் கணினி போன்ற பிற சாதனங்களுடன் இவற்றைப் பொருத்திவிட்டால், வயர்லெஸ் மூலம் எளிதாகத் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சாதனமாகும். மேலும் கான்டாக்ட் லெஸ் பேமெண்ட், மார்க்கெட்டிங், நோயாளிகளின் தகவல்களை சேமித்தல், வாகனம் எங்கே செல்கிறது என்பதைக் கண்டறிதல் போன்ற பல்வேறு வகையான பயன்பாட்டிற்கு இதை உபயோகிக்கலாம். 

2021 ஆம் ஆண்டு வெளியான சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் டேக்-ன் விலை 29.99 டாலர்களாக அறிமுகம் செய்யப் பட்டது. இந்திய மதிப்பில் சுமார் 2460 ரூபாய். இதுவே ஆப்பிள் நிறுவனத்தின் ஏர் டேக்-ன் விலை 3350 ரூபாய் ஆகும். புதிதாக வரவிருக்கும் இரண்டாம் தலைமுறை சாதனத்தின் விலை என்ன என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் முதல் தலைமுறை சாதனத்தை விட இது சற்று  விலை கூடுதலாக இருக்கும் என்று நம்பலாம். 

இந்த ஸ்மார்ட் டேக்குகள் பல்வேறு விதமான தொழில்களில் மிகுந்த பயன்பாடுகளைக் கொண்டவை. தனிநபர் பயன்பாடு மற்றும் வணிகப் பயன்பாடு போன்ற இரண்டிற்கும் நல்ல பாதுகாப்பு, செயல்திறன் போன்ற வசதியை ஏற்படுத்திக் கொள்ள இவை உதவும் என்கிறார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com