வீடியோக்களை பதிவேற்ற டிவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ள இரண்டு புதிய அம்சங்கள்!
ட்விட்டர், கடந்த வாரம், ப்ளூ டிக் பயனர்கள் இனி இரண்டு மணி நேர கால அளவுக்கான 8 ஜி பி வரையிலான வீடியோக்களை பதிவேற்றலாம் என்று அறிவித்தது. நிறுவனத்தின் தலைமை அதிகாரி எலான் மஸ்க் தற்போது மேலும் இரண்ட புதிய அம்சங்களை அறிவித்திருக்கிறார்.
அதன் படி ட்விட்டர் இனி தேடுபொறியைப் பெறுகிறது என்பதுடன் வீடியோ பிளேபேக்கின் போது 15 வினாடிகள் முன்னோக்கி மற்றும் பின் தேடும் பட்டன்களைச் சேர்க்கும் என எலான் மஸ்க் கூறினார். ட்விட்டரில் பயனர் ஒருவர் பிக்சர்-இன் பிக்சர் மோடில் 15 வினாடிகள் முன்னோக்கி மற்றும் பின் தேடும் பட்டன்களைச் சேர்க்கும் படி எலான் மஸ்கிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க், " அந்த வசதி அடுத்த வாரம் வரும், பிக்சர்-இன் பிக்சர் மோடில் , நீங்கள் இனி ஸ்க்ரோலிங் செய்யும் போதும் வீடியோ பார்க்கலாம்" என்று மஸ்க் கூறினார்.
அவரது அறிவிப்பின் படி ட்விட்டரில் இனி பயனர்கள் வீடியோக்களைப் பார்க்க பிக்சர்-இன்-பிக்ச்சர் பயன்முறை இருக்கும், இதனால் அவர்கள் வீடியோக்களைப் பார்க்கும்போது ஸ்க்ரோலிங்கையும் தொடர முடியும் என்று அவர் கூறினார்.
பிக்சர்-இன்-பிக்ச்சர் (PiP) பயன்முறையானது ஒரு வீடியோ பிளேயரை மிதக்கும் சாளரமாகச் அதாவது மினி விண்டோவாகச் சுருக்கி, அதை ஒரு கணினி அல்லது லேப் டாப் திரையின் ஒரு மூலையில் வைக்கும், இதனால் அது பயனர்களின் ஸ்க்ரோலிங் அனுபவத்தைப் பாதிக்காது.
இந்த புதிய மாற்றத்திற்கு ட்விட்டரில் பயனர்கள் பலர் நன்றி தெரிவித்திருந்தனர்.
"நன்றி. சரியாக இந்த அம்சம் எனக்கும் வேண்டும் என்று நான் நினைத்தேன்," என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்திருந்தார்.
"நன்றி, இதன் காரணமாக நான் பல வீடியோக்களை தவிர்க்கிறேன்" என்று மற்றொரு பயனர் கூறினார்.
மேலும் ஒரு பயனரோ , "இந்தப் பரிந்துரைகள் அனைத்தையுமே "YouTube ஐப் போலவே சிறந்ததாக்குங்கள்" - YouTube இன் அம்சங்களை குளோன் செய்ய எவ்வளவு செலவாகுமோ என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது , ஆனால் இப்போது AI இன் குறியீட்டு உதவியால் இப்போது அது இத்தனை மலிவானதாகி விட்டது ".
நீண்ட வீடியோக்களைத் தவிர, இந்த சமூக வலைப்பின்னல் தளமானது விரைவில் வீடியோ மற்றும் குரல் அழைப்புகளின் அம்சத்தை தனது தளத்தில் அறிமுகப்படுத்தும் என்பதை வெளிப்படுத்தியது.
ட்விட்டர் ப்ளூ டிக் பயனர்களுக்கு நேரடி செய்திகள் (டிஎம்கள்) இப்போது குறியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் மஸ்க் அறிவித்தார்.