வாட்ஸ் அப் அக்கவுண்ட் ஹேக்கிங் நடக்குது: உஷார் மக்களே!

வாட்ஸ் அப் அக்கவுண்ட் ஹேக்கிங் நடக்குது: உஷார் மக்களே!

முன்பெல்லாம் வெறும் செய்தி பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட்ட வாட்ஸாப் செயலி, தற்போது பல்வேறு நிறுவனங்களின் பாஸ்வேர்ட், டாக்குமெண்ட், தனிப்பட்ட டேட்டா போன்ற பல தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் தளமாக பயன்படுத்தப்படுகிறது. 

எனவே, ஹாக்கர்கள் தற்போது வாட்ஸ் அப் வழியாகவும் கைவரிசை காட்டத் தொடங்கி விட்டார்கள். பலர் இணைந்திருக்கும் ஒரு குரூப்பில் இணைந்து, பிறருடைய அக்கவுண்டில் உள்ள டேட்டாக்களை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதற்காக பல வழிகளை ஹேக்கர்கள் கையாளுகின்றனராம்.

தற்போது வாட்ஸ் அப்பில் அதிகப்படியான குரூப் மெசேஜ் பிரைவேட் மெசேஜ்களில் ஸ்பேம் லிங்க் இணைக்கப்பட்ட மெசேஜ்கள் வருகிறது. 

தவறுதலாக யாராவது அந்த லிங்கை தொட்டு உள்ளே நுழைந்தால், அவ்வளவுதான் ஹேக்கர்கள் அவர்களின் சாதனத்தில் புகுந்து விடுவார்களாம். நாம் எதுவுமே செய்யாமல் நம்முடைய எண்ணுக்கு ஓடிபி வந்தால் நாம் சற்று கவனமாக இருக்க வேண்டும். இவை பெரும்பாலும் டேட்டா திருடும் ஹேக்கர்களின் செயலாகவே இருக்கக் கூடும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

நீங்கள் அறியாமல் உங்கள் செல்போனின் முழுக் கட்டுப்பாடையும் அவர்கள் வைத்திருக்கும் பட்சத்தில், உங்கள் டேட்டா அனைத்தையும் அவர்கள் திருட வாய்ப்புள்ளது. அவ்வாறு திருடப்பட்ட விஷயங்களை வைத்து உங்களிடமே பணம் பறிக்கலாம் அல்லது பிறருக்கும் அதை விற்பனை செய்யலாம். 

இவ்வாறு திருடுபவர்கள் முதல் வேலையாக செய்வது திருடப்பட்டவரின் whatsapp எண்ணை அவர்களுடைய எண்ணுக்கு மாற்றி விடுவார்கள். அப்படி மாற்றும் பட்சத்தில் நீங்கள் எந்தெந்த குரூப்பில் இணைந்துள்ளீர்களோ அந்த குரூப்பில் உள்ளே சென்று அங்கேயும் கைவரிசை காட்ட வாய்ப்புள்ளது. மேலும், உங்களுடைய டேட்டாக்களை உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு பகிர்ந்து விடுவேன் என்று கூறி உங்களையே மிரட்டவும் செய்வார்கள். 

நீங்கள் ஏதாவது ஒரு குரூப்பில் இருக்கும் போது, அங்கே ஏதேனும் நபருடைய எண் திடீரென்று மாற்றப்பட்டால், அவரிடம் நேரடியாக விசாரித்து அறிந்துகொள்வது நல்லது. முடிந்தவரை வாட்ஸ் அப்பை அவ்வப்போது செக்யூரிட்டி அப்டேட்டாக வைத்திருங்கள். அதுபோக எப்போதும் வாட்சப் லேட்டஸ்ட் வெர்சனையே பயன்படுத்துங்கள். அதிகம் பயன்படுத்தாமல் தேவையில்லாமல் உங்கள் போனில் உள்ள செயலிகள் அனைத்தையும் அன்இன்ஸ்டால் செய்து விடுங்கள்.  

என்னதான் தொழில்நுட்ப ரீதியாக செக்யூரிட்டி லூப் ஹோல்களை வாட்ஸ்அப் அவ்வப்போது சரி செய்து வந்தாலும், புதிய வழிகளைக் கண்டுபிடித்து டேட்டாக்களை திருடும் கும்பல் தன் கைவரிசையை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது. 

எந்த அப்ளிகேஷன் பயன்படுத்த வேண்டும், எதன் உள்ளே நாம் நுழைய வேண்டும் என்பதெல்லாம் நம்முடைய தேர்வில் தான் இருக்கிறது. எனவே தேவையில்லாமல் வரும் எந்தவொரு அனாவசிய லிங்கையும் கிளிக்செய்து பார்க்க வேண்டாம். 

இந்த இணையை உலகில் அனைத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது நம்மிடம்தான் இருக்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com