எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ பிடிப்பது ஏன்?

எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ பிடிப்பது ஏன்?

ரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து விட்டால் போதுமே, இந்தியாவில் எந்த மூலை முடுக்காக இருந்தாலும் அது மிகப் பெரிய செய்தியாகிவிடும். குறிப்பாக அதை யாராவது வீடியோ எடுத்து விட்டால் அவ்வளவு தான். இரவோடு இரவாக பல மில்லியன் பார்வைகளைப் பெற்று வைரல் ஆகிவிடும். 

எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கையும், சரி நாமும் ஒரு எலக்ட்ரிக் வாகனம் வாங்கினால் என்ன? என்ற யோசனையில் இருப்பவர் களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேதான் போகிறது. இப்படி இருக்கும் சூழலில், எங்கேயாவது எலக்ட்ரிக் வாகனம் தீப்பிடித்த செய்தியைக் கேள்விப்பட்டால், எலக்ட்ரிக் வாகனம் வாங்கியவர் மட்டுமன்றி, வாங்கப் போகிறவர்களின் மனநிலையும் மோசமாகிறது. 

"என்ன பின்ன? திடீர்னு ஓட்டிக்கிட்டே இருக்கும்போது வண்டி பத்திக்கிட்டா என்ன பண்றதாம்?"

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட, தானேவில் உள்ள ஓர் நெடுஞ்சாலையில், எலக்ட்ரிக் வாகனம் ஒன்று திடீரென்று தீப்பிடித்துக் கொண்டது. நல்லவேளை இந்த விபத்தின் போது வாகனத்தில் சென்ற இருவரும் உடனடியாக வாகனத்தை நிறுத்தி நகர்ந்து சென்றதால் உயிர் தப்பினர். பின்னர் இது குறித்த செய்தியறிந்த தீயணைப்புத் துறையினர் அவ்விடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து செய்தியும் மிகப்பெரிய வைரல் ஆனது. 

இதுபோன்ற தீ விபத்துகளின் பின்னால் மிக முக்கிய 4 உண்மைகள் அடங்கியிருக்கிறது. இதைப் பற்றி எலக்ட்ரிக் வாகன நிறுவனங்கள் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், அதை நாம் அறிந்துகொள்வது நல்லது. 

  1. பொதுவாகவே எலக்ட்ரிக் வாகனங்கள் அதன் உள்ளே இருக்கும் பேட்டரியின் மூன்று நிகழ்வுகளான எலக்ட்ரிக்கல், தெர்மல், மெக்கானிக்கல் கோளாறுகளின்போதுதான் தீப்பிடிக்கும். எனவே நல்ல பேட்டரி அம்சம் கொண்ட எலக்ட்ரிக் வாகனம் வாங்குவது நல்லது. 

  2. ரண்டாவதாக, ஏதேனும் மோதல் ஏற்பட்டால் கூட வாகன பேட்டரியில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. அல்லது ஏற்கனவே வாகனத்தில் வரும் பேட்டரி சேதம் அடைந்திருந்தாலும் தீப்பிடிக்ககூடும். 

  3. லித்தியம் அயன் பேட்டரியில் நடக்கும் செயின் ரியாக்ஷன் காரணமாக வெப்பநிலை அதிகமாக வாய்ப்புள்ளது. இதனை "தெர்மல் ரன்வே நிகழ்வு" எனக் கூறுகிறார்கள். இதனால் ஏற்படும் ரசாயன எதிர்வினை காரணமாக பேட்டரி தீப்பிடிக்கலாம்.

  4. சில சமயங்களில் எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் செய்யும் போது கூட தீ விபத்து ஏற்படலாம். ஒரு பேட்டரிக்கு அதன் கொள்ளளவைத் தாண்டி அதிகபட்சமான மின்னோட்டம் கொடுக்கும் போது, அதன் கண்ட்ரோல் சாதனத்தில் பழுது ஏற்பட்டு, வெப்பமடைந்து தீ பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிக நேரம் ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும். 

எலக்ட்ரிக் வாகனம் வாங்க நினைப்பவர்கள் மேற்கூறிய நான்கு காரணங்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. இது பற்றி அந்த நிறுவனத்திடம் கூட விசாரித்துக் கொள்வது, ஒரு சிறந்த எலக்ட்ரிக் வாகனத்தை வாங்குவதற்கு உதவியாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com