இனி ட்விட்டரில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யலாம்.

இனி ட்விட்டரில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யலாம்.

னி Twitter தளத்தில் ஒருவருடைய மொபைல் எண்ணைப் பயன்படுத்தாமலேயே வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்து கொள்ளலாம் என நேற்று வெளியிட்ட Tweet ஒன்றில் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

மக்களின் கருத்து பரிமாற்றத்திற்கு முக்கிய செய்தியாக இருந்த ட்விட்டரை எலான் மஸ்க் அவர்கள் கைப்பற்றிய நாள் முதலே அதில் பல மாற்றங்களையும் பரபரப்பான விஷயங்களையும் செய்து வருகிறார். "இவர் கைல மாட்டிகிட்டு இந்த ட்விட்டர் படாத பாடுபடுதே" என அதன் பயனர்கள் புலம்பித் தள்ளினார்கள். 

அந்த அளவுக்கு ட்விட்டர் தளத்தில் ப்ளூ டிக் வசதி, செய்தியாளர் கணக்கு முடக்கம், பணியாட்கள் குறைப்பு, ட்விட்டரின் லோகோவை மாற்றுதல், ட்விட்டரை முடக்கப் போகிறேன் என ட்விட்டரிலேலையே பதிவு போடுதல் என்று பல மாற்றங்களைக் கொண்டுவந்து எப்பொழுதும் பரபரப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தார் எலான் மஸ்க். 

ட்விட்டரை வாங்குவதற்காக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்று, தனது சொத்து மதிப்பில் பெரும் பகுதியை இழந்தார். இதனால் ட்விட்டர் தளத்தை லாபகரமானதாக மாற்ற மும்முரமாக பல வேலைகளை செய்துவரும் எலான் மஸ்க், அதில் பல்வேறு சிறப்பம் சங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறார். 

அவர் CEO-ஆக பொறுப்பேற்கும் போதே ட்விட்டரை எல்லாம் கிடைக்கும் செயலி என முன்மொழிந்தார். அதன்படி பதிவுகளில் அதிக வார்த்தைகளை சேர்ப்பது, பணம் கொடுத்தால் ப்ளூ டிக் பெறலாம் என்பதை யெல்லாம் தொடக்கத்திலேயே கொண்டுவந்து அசத்தினர். இந்த நிலையில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டெலிகிராம் போன்ற செயலிகள் போட்டிப் போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வரும் நிலையில், ட்விட்டரும் களத்தில் இறங்கியுள்ளது. 

அவர் நேற்று போட்ட ட்வீட் ஒன்றில், ட்விட்டரில் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை விரைவில் கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் திரெட் பகுதியில் இருக்கும் மெசேஜ்களுக்கு என்கிரிப்ட் ரிப்ளை செய்யும் வசதி, புதிய அப்டேட்டில் கிடைக்கும் என்றும், அதேசமயம் எல்லா விதமான எமோஜி ரியாக்சன்களையும் உங்களால் இனி பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக ஒருவருடைய மொபைல் நம்பரைப் பகிராமிலேயே, ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி ஒவ்வொரு பயனர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார் எலான் மஸ்க்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com