நக்சலைட் இல்லாத மாநிலமாக மாறிய தெலுங்கானா: திருந்தியவர்களுக்கு அரசு சலுகை..!

telangana
telangana
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

2026 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு வைத்திருந்தது. அதற்கான தொடர் முயற்சிகளின் பலனாக பல மாநிலங்களில் நக்சலைட்கள் அமைதிப் பாதைக்கு திரும்பினர்.

இதை தொடர்ந்து , தெலுங்கானாவில் இருந்த மாவோயிஸ்ட் மக்கள் விடுதலை கெரில்லா ராணுவத்தின் தளபதி சோடி மல்லா உட்பட 42 நக்சல்கள் மாநில காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெலங்கானா டிஜிபி சிவதர் ரெட்டி வெளியிட்டுள்ளார். இதனால் நக்சல் இல்லாத மாநிலமாக தெலுங்கானா மாறியுள்ளது , கடந்த மாதம் ஆந்திரா நக்சல் இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சரணடைந்தவர்கள் தங்களிடம் இருந்த ஏகே-47 துப்பாக்கிகள்,  எஸ்.எல்.ஆர்  துப்பாக்கிகள், இன்சாஸ் துப்பாக்கிகள், ஸ்டென் கன் , கையெறி குண்டுகள் மற்றும் 1007 தோட்டாக்களையும் ஒப்படைத்தனர். இது மட்டுமல்லாமல் 800 கிராம் தங்கத்தையும் சேர்த்து ஒப்படைத்தனர்.

மாநில அரசாங்கம் இவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை அறிவித்து ஹெல்த் இன்சூரன்ஸ் , தொழில் செய்ய ஆட்டோ ரிக்ஷாக்கள் , குழுவினருக்கு ₹1.93 கோடி நிதியுதவி ஆகியவற்றையும் வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்:
திருச்செந்தூரில் கவனத்தை ஈர்த்த வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம்..!
telangana
logo
Kalki Online
kalkionline.com