அதிரடியாக கைது செய்யப்பட்ட Telegram CEO… 20 ஆண்டுகள் சிறை? 

Telegram CEO
Telegram CEO arrested.
Published on

Telegram, உலகளாவிய அளவில் மிகவும் பிரபலமான தகவல் பரிமாற்ற App-களில் ஒன்றாகும். அதன் வலுவான இன்டர்பேஸ், தனியுரிமை அம்சங்களால் பலரால் விரும்பப்படுகிறது. ஆனால், நேற்று Telegram CEO Durov, பிரான்ஸ் நாட்டில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி உலகெங்கிலும் உள்ள பயனர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவர் ஏன் திடீரென கைது செய்யப்பட வேண்டும்? 

டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக செயல் அதிகாரியுமான Pavel Durov, நேற்று மாலை பாரிசுக்கு வெளியே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். துரோவ் தனது தனிப்பட்ட விமானத்தில் இருந்து வெளியே வந்தவுடன் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்தன. தற்போதுவரை அவர் கைது குறித்து அதிகாரப்பூர்வமான காரணம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சில ஊடகங்களும், நிபுணர்களும் சில காரணங்களை முன்வைக்கின்றனர். 

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரட்டை குடியுரிமை பெற்ற துரோவ், தற்போது துபாயில் வசித்து வருகிறார். இவர் நிறுவிய டெலிகிராம் செயலி, உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட முதல் ஐந்து செயல்களில் ஒன்றாகும். உலகெங்கிலும் 950 மில்லினுக்கும் அதிகமான ஆக்டிவ் பயனர்களை கொண்டுள்ள சிறந்த செயலி. 

டெலிகிராம் செயலி, தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்ப பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சில நாடுகளில் அரசாங்கங்கள் இதுபோன்ற செயல்பாடுகளை கடுமையாக எதிர்க்கின்றன. இந்த தளம், குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும், குறிப்பாக மருந்து கடத்தல், பண மோசடி போன்ற செயல்களுக்கு இதை பலர் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
தக்காளியை சில நாட்கள் கெட்டுப்போகாமல் பத்திரமாக வைக்க சில டிப்ஸ்..!
Telegram CEO

டெலிகிராம் செயலியின் வலுவான தனியுரிமைக் கொள்கை சில அரசாங்கங்களுக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. ஏனெனில், இது குற்றவாளிகள் தங்கள் செயல்களை மறைக்க உதவுகிறது என அவர்கள் கருதுகின்றனர். சில சூழ்நிலைகளில் அரசியல் காரணங்களுக்காகவும் தனிநபர்கள் கைது செய்யப்படுவதுண்டு. சில நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிராக telegram செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அதன் CEO கைது செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 

இந்த குற்றத்திற்காக இவர் 20 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com