மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கான டெண்டர்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவிற்கான டெண்டர்!

மதுரை சித்திரைத் திருவிழாவிற்கான பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்கான ரூ.60 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளியை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மதுரை என்றாலே நம் நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் திருக்கோயில். உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களுள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. இங்கு நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் முக்கியமானது, பிரசித்தி பெற்றது. திருவிழாவில் சுவாமி புறப்பாடு காண லட்சக்கணக்கில் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். . மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், திருமாலிருஞ்சோலை அழகர் வைகை எழல் வைபவம் என மதுரையே களைகட்டி இருக்கும்.

இந்த சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வுகளான கொடியேற்றம், திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், இதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி, சித்திரைத் திருவிழா கோலாகலமாக தொடங்க உள்ளது. பத்து நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் கற்பக விருட்ச வாகனத்தில் சிவனாரும், சிம்ம வாகனத்தில் அம்பாளும் வீதியுலா வருவார்கள். பஞ்சமூர்த்தி புறப்பாடாக, நான்கு மாசி வீதிகளிலும் வருகிற ஸ்வாமியையும் அம்பாளையும் பார்க்க பிறவி பயன் முழுமையடையும்.

ஆடி வீதியில் பந்தல் அமைத்தல், சித்திரை வீதிகளில் தடுப்புகள் அமைத்தல், ஆடி விதிகளில் வர்ணம் பூசுதல், தேர் அலங்கரித்தல், திருக்கல்யாண மண்டபத்தில் பந்தல் அமைத்து பூ அலங்காரம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளியை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பாக பத்துக்கும் மேற்பட்ட பணிகளுக்கு 60 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடுவதாகவும், ஒப்பந்தப்புள்ளி எடுக்க விரும்பும் நிறுவனங்கள் கோயில் நிர்வாகத்தில் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com